Published : 24 Aug 2016 11:55 AM
Last Updated : 24 Aug 2016 11:55 AM

ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்ட தகவல்: இந்திய நீர்மூழ்கி கப்பலின் ரகசியங்கள் கசிவு- விசாரணை நடத்த அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவு

இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கி கப்பலின் ரகசியங்கள் கசிந்துள் ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி கப்பல் படை தளபதிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள் ளார்.

இந்திய முப்படைகளின் திறனை மேம்படுத்த உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பல்வேறு ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, கப்பல் படைக்கு 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்துடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள் ளது. (டிசிஎன்எஸ் நிறுவனத்தில் பிரான்ஸ் அரசு மூன்றில் 2 பங்கு களை வைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.)

மொத்தம் 3.55 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23,562 கோடி) மதிப்புள்ள இந்த ஒப்பந் தத்தின்படி, இந்நிறுவனம் இந்தி யாவுக்கென்றே பிரத்தியேகமான தொழில்நுட்பத்துடன், பல்வேறு மேம்பட்ட வசதிகளை இணைத்து ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்துள்ளது.

இவற்றில் ஒரு கப்பல், இந்தி யாவிலேயே உருவாக்கப்பட்டது. ‘ஐ.என். எஸ். கேல்வரி’ என்று அழைக்கப் படும் அந்த ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல், கடந்த மே மாதம் கடலில் வெள்ளோட்டம் பார்க்கப் பட்டது. இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட உள்ளது.

மீதமுள்ள 5 நீர்மூழ்கி கப்பல் கள் கட்டும் பணி மும்பையில் உள்ள ‘மசாகான் டாக் லிமிடெட்’ நிறுவனத்தில் தொடர்ந்து நடக்கி றது. இதற்கான வடிவமைப்பு, தொழில்நுட்பங்களை பிரான்சின் டிசிஎன்எஸ் நிறுவனம் அளித்து வருகிறது. வரும் 2020-ம் ஆண்டுக் குள் மற்ற 5 நீர்மூழ்கிக் கப்பல்களும் இந்திய கப்பல் படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ள து. அப்படி இணைக்கப்பட்டால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்திய கப்பல் படையின் மிக முக்கிய சக்தி வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல்களாக இருக்கும் என்றும் கடல் பாது காப்பை உறுதி செய்ய முடியும் என்றும் கப்பல் படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், மிகமிகப் பாதுகாப் பாக பராமரிக்கப்பட்டு வந்த ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலின் ரகசியங்கள் நேற்று கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘தி ஆஸ்திரேலியன்’ என்ற பத்தி ரிகை தனது இணையதளத்தில் அந்த தகவல்களை நேற்று வெளி யிட்டுள்ளது. ‘Restricted Scorpene India’ என்ற தலைப்பில் மொத்தம் 22,400 பக்கங்களில் ஸ்கார்பீன் கப்பலை பற்றிய விவரங்கள் கசியவிடப்பட்டுள்ளன.

இவற்றில் நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கடியில் செயல்படும் சென்சார் குறித்து 4,457 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தவிர 4,209 பக்கங்களில் நீர்மூழ்கி கப்பல் நீருக்கு மேல் செயல்படும் சென்சார்கள் குறித்தும், 4,301 பக்கங்களில் போர் உத்திகள் குறித்தும், 6,841 பக்கங்களில் தொலைத்தொடர்பு சாதனங்கள் குறித்தும், 2,138 பக்கங்களில் நீர்மூழ்கி கப்பலை செலுத்தும் வேகம், எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் கப்பல் பணியாளர்கள் உரையாடுவது, அதற்கான காந்த, மின்காந்த அலைவரிசைகள் மற்றும் கட்டமைப்பு குறித்தும், 500 பக்கங்களில் தாக்குதல் திறன் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்ப லின் ரகசியங்கள் கசிந்துவிட்ட நிலையில், “அவை தங்கள் நாட்டில் இருந்து கசியவில்லை. இந்தியாவில் இருந்து கசிந்திரு க்கும்” என்று ஆஸ்திரேலிய பிரத மர் மால்கம் டர்ன்புல் பகிரங்கமாக மறுத்துள்ளார். ஆனால், “இந்தி யாவில் இருந்து ரகசியங்கள் கசிந்திருக்க வாய்ப்பில்லை. இது கம்ப்யூட்டர் ஊடுருவல்கார்களின் ‘ஹேக்கிங்’ வேலையாக இருக்க லாம். இதுகுறித்து விசாரணை நடத்த கப்பல் படை தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று மத்திய பாதுகாப் புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று கூறினார்.

இதுகுறித்து இந்திய கப்பல் படை வெளியிட்ட அறிக்கையில், “வெளிநாட்டு பத்திரிகையில்தான் நீர்மூழ்கி கப்பல் குறித்த ஆவ ணங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இருந்து ரகசியங்கள் கசியவில்லை” என்று தெரிவித் துள்ளது.

இதுகுறித்து டிசிஎன்எஸ் நிறுவனம் கூறும்போ து, “ஆஸ்திரேலிய பத்திரிகையின் இணையதளத்தில், ஸ்கார்பீன் நீர் மூழ்கி கப்பல் பற்றிய ரகசியங்கள் கசிந்துள்ளது தெரியும். இந்தியா வில் இருந்து அந்த ரகசியங்கள் கசிந்திருக்கலாம். இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப் புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆவணங்களை கசியவிட் டவர்கள் யார், அதனால் எங்கள் வாடிக் கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தெரியவரும்” என்று தெரிவித்துள்ளது.

ஸ்கார்பீன் கப்பல் குறித்த தக வல்கள் இந்தியாவுக்காக கடந்த 2011-ம் ஆண்டு பிரான்ஸ் அரசால் கணினியில் தொகுக்கப்பட் டுள்ள து. அதே ஆண்டு பிரான்ஸ் கப்பல் படை முன்னாள் அதிகாரி ஒருவ ரால் அந்த ஆவணங்கள் அழிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. அப்படி செய்தவர் அந்த நேரத்தில் டிசிஎன்எஸ் நிறுவனத்தின் சப் கான்ட்ராக்டராக இருந்துள்ளார் என்று ‘தி ஆஸ்திரேலியன்’ பத்தி ரிகை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் விளக் கம்

இதுகுறித்து, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் நேற்று கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு 38 பில்லி யன் அமெரிக்க டாலர் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்கித் தர, பிரான்ஸ் நிறுவனத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எங்களுக்காக வேறு மாடலில் நீர்மூழ்கி கப்பல் கள் தயாரிக்கப்பட உள்ளன. அவை இந்தியாவுக்காக தயா ரிக்கப்படும் ஸ்கார்பீன் ரகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதற்கான ரகசியங்கள் மிகவும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

எங்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல் கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. அது ஆஸ்திரேலி யாவுக்குள்ளோ அல்லது வெளிநாடுகளுடன் தொடர்பு உள்ள ஆவணங்களோ, மற்றவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களோ எவையாக இருந்தாலும் அவை பத்திரமாக உள்ளன. தற்போது வெளியாகி உள்ள ஆவணங்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றார்.

மலேசியா, சிலி, பிரேசிலும் அதிர்ச்சி

பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் இருந்து இந்தியா தவிர, மலேசியா, சிலி, பிரேசில் போன்ற நாடுகளும் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிலையில், ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களின் ரகசியங்கள் வெளியானதால், மலேசியா, சிலி, பிரேசில் நாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x