Published : 23 Nov 2015 09:20 AM
Last Updated : 23 Nov 2015 09:20 AM

ஷீனா போரா கொலையில் என் தந்தை அப்பாவி: ராகுல் முகர்ஜி

‘‘ஷீனா போரா கொலை வழக்கில் என் தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் அப்பாவி’’ என மகன் ராகுல் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஷீனா போரா கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர் பாக ஷீனாவின் தாய் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் முன்னாள் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திடீர் திருப்பமாக இந்திராணியின் 3வது கணவரும் ஸ்டார் இந்தியா டிவி முன்னாள் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜியையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து அவர் மீது கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தன் தந்தை பீட்டர் முகர்ஜிக்கு இந்த கொலை யில் தொடர்பு இல்லை என்றும் அவர் அப்பாவி என்றும் மகன் ராகுல் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறி்த்து நிருபர்களிடம் நேற்று அவர் கூறும்போது, ‘‘வழக்கு விசாரணையில் இருப்பதால், எனது தந்தை அப்பாவி என்பதற்கான காரணங்களை இப்போது என்னால் கூற முடியாது. ஆனால், அவர் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட வில்லை என்பதை ஆணித்தரமாக கூற முடியும்’’ என்றார்.

முன்னதாக சிபிஐ அலுவலகத் துக்கு சென்ற ராகுல் முகர்ஜி, சொத்து விவகாரத்தில் தாய் இந்திராணியை மிரட்டும் விதமாக ஷீனா போரா அனுப்பி வைத்த இ-மெயில் கடிதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஒப் படைத்தார்.

ஷீனா போரா கொலை வழக்குக்கு தேவையான பல முக்கிய ஆவணங்களை ராகுல் முகர்ஜிதான் ஒப்படைத்து வரு வதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் மும்பையில் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டை தனக்கு வாங்கி தராவிட்டால் சகோதரி அல்ல; மகள் தான் என்ற உண்மையை வெட்டவெளிச்சமாகி விடுவேன் என இந்திராணிக்கு, ஷீனா போரா மிரட்டல் விடுத்த முக்கிய கடிதத்தையும் சிபிஐ வசம் ராகுல் ஒப்படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

வித்தி மீது பாசம்

ஏற்கெனவே சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ராகுல் ஷீனா போரா திருமணம் நடந்தால் பீட்டர் முகர்ஜியின் ஒட்டு மொத்த சொத்துக்களும் அவர் களுக்கு சென்றுவிடும் என்ற அச்சத்தினாலும், 2-வது கணவர் மூலம் பிறந்த வித்தியின் மீதான பாசத்தினாலும் தான், இந்திராணி இந்த கொலையை செய்ததாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

தவிர, ராகுல் ஷீனா போரா மீது இந்திராணி கடுங்கோபத்தில் இருந்ததால் அவர்களை எச்சரிக் கையாக இருக்கும்படி அறி வுறுத்தி வித்தி அனுப்பி வைத்த எஸ்எம்எஸ் தகவலும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம்பெற் றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஷீனா போரா 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின், வெளியுலகுக்கு அவர் உயிருடன் இருப்பதாக நம்ப வைக்க அவரது இ-மெயில் கணக்கில் இருந்தே இந்திராணி தன் கணவர் பீட்டர் முகர்ஜிக்கு தகவல் பரிமாற்றம் செய்து வந்திருப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x