Last Updated : 18 Apr, 2014 12:11 PM

 

Published : 18 Apr 2014 12:11 PM
Last Updated : 18 Apr 2014 12:11 PM

வாஸ்து சாஸ்திரப்படி வாக்களித்த‌ ரயில்வே இணை அமைச்சர்

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சரும் கோலார் தொகுதி வேட்பாளருமான கே.எச்.முனியப்பா வாஸ்து சாஸ்திரப்படி மின்னணு இயந்திரத்தை திருப்பி வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோலார் அரசு பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா தெற்கு பக்கமாக இருந்த வாக்கு இயந்திரத்தை கிழக்கு பக்கமாக திருப்ப முயற்சித்தார்.அதனைத் தொடர்ந்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரி ரவியை அழைத்து வாக்கு இயந்திரம் இருக்கும் மேஜையை கிழக்கு நோக்கி திருப்பச் சொல்லி வாஸ்து சாஸ்திரப்படி வாக்க ளித்தார்.

வாக்களித்த நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா பிடதியில் வாக்களித்தார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட சீடர்களும் வாக்கு சாவடிக்கு வந்தனர். அப்போது கன்னட அமைப்பினரும் அங்கு இருந்த‌தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வாக்களித்துவிட்டு வெளியே வந்த நித்தியானந்தா தாமரைக்கு வாக்களிக்குமாறு சைகை மூலமாக தனது பக்தர் களுக்கு தெரிவித்தார்.

7 பேர் பலி

பெல்காம் வாக்குச்சாவடியில் பணியில் இருந்த தேர்தல் கண்காணிப்பாளர் பஷீர் (53), தும்கூர் மாவட்டம் துருவகெரேவில் பணியில் இருந்த கங்காதர் (55), பெங்களூர் ஊரக தொகுதியில் இருக்கும் கெங்கேரி வாக்குச்சாவடியில் பணியில் இருந்த நஞ்சுண்டையா (48) ஆகியோர் திடீரென பலியாகினர். இதேபோல வாக்க ளிக்க வாக்குச்சாவடிக்கு வந்த 4 பொதுமக்களும் பலியான சம்பவம் கர்நாடகாவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் பிரதமர் ஆவேன்

ஹாசன் தொகுதியின் வேட்பாளரும்,முன்னாள் பிரதம ருமான தேவகவுடா நல்ல நேரம் பார்த்து வாக்களித்தார். அவர் பேசுகையில், ' ஹாசன் தொகுதியில் அமோக வெற்றிபெறுவேன்.மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 முதல் 20 தொகுதிகள் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது. 20 தொகுதி களை கைப்பற்றினால் நானே மீண்டும் பிரதமராவேன்'' என்றார்.

ஷிமோகா தொகுதியின் வேட்பா ளரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஷிமோகாவில் தனது மகள்களுடன் வந்து வாக்களித்தார். அவர் கூறுகையில், ''பா.ஜ.க. கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும். மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் மோடி 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வார். ஷிமோகா தொகுதியில் நான் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்''என்றார்.

காங்கிரஸுக்கு 22 இடங்கள்

மண்டியா தொகுதியில் வாக்களித்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல் வருமான எஸ்.எம்.கிருஷ்ணா பேசுகையில், ''கர்நாடகாவில் 22 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்.மண்டியாவில் ரம்யா 2-வது முறையாக வெற்றி பெறுவார்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x