Last Updated : 27 Sep, 2016 10:52 AM

 

Published : 27 Sep 2016 10:52 AM
Last Updated : 27 Sep 2016 10:52 AM

மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கு அடுத்த மாதம் 7-ம் தேதி தேர்தல்: முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் உசேனுக்கு வாய்ப்பு

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நஜ்மா ஹெப்துல்லா. இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

சமீபத்தில் இவர் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டார். இதையடுத்து, நஜ்மா தனது மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவையில் ஒரு இடம் காலியானது.

காலியாக உள்ள இந்த இடத் துக்கு வரும் அக்டோபர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இந்த இடம் பாஜக வின் தேசிய செய்தி தொடர் பாளர்களில் ஒருவரான ஷாநவாஸ் உசேனுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. பிஹாரைச் சேர்ந்த உசேன் முன்னாள் மத்திய அமைச்ச ராக இருந்தவர். அவ்வாறு தேர்ந் தெடுக்கப்பட்டால் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வரையில் இந்தப் பதவியில் இருக்கலாம்.

இதுகுறித்து பாஜக தேசிய நிர்வாக வட்டாரத்தினர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘கட்சியின் முக்கிய முஸ்லிம் தலைவரான ஷாநவாஸ் இப்போது மத்திய அரசின் எந்த பதவியிலும் இல்லை. எனவே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தனக்கு நெருக்கமான ஷாநவாஸுக்கு வழங்குமாறு பரிந்துரை செய் துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியும் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவும் இறுதி முடிவு எடுப்பார்கள்” என்றனர்.

கடந்த 2014 மக்களவைத் தேர் தலில் பிஹாரின் பாகல்பூர் தொகுதி யில் போட்டியிட்ட ஷாநவாஸ், லாலு கட்சி வேட்பாளரிடம் மிகக்குறைந்த வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து மாநிலங் களவை உறுப்பினராக இருந்தார். இவர் இந்தப் பதவியை கடந்த ஜுலை 18-ம் தேதி ராஜினாமா செய்ததுடன் பாஜகவில் இருந்தும் வெளியேறினார். இதையடுத்து இந்த இடமும் காலியாக உள்ளது.

குடியரசுத் தலைவரால் பரிந் துரைக்கப்படும் இப்பதவியைப் பெற கடும் போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x