Published : 20 Oct 2014 04:53 PM
Last Updated : 20 Oct 2014 04:53 PM

மாணவியின் கண் அறுவை சிகிச்சைக்காக பேஸ்புக் மூலம் நிதி திரட்டிய ஆசிரியர்

தன்னிடம் பயிலும் மாணவியின் கண் அறுவை சிகிச்சைக்காக பேஸ்புக் மற்றும் 'வாட்ஸ் அப்' மூலம் ஆசிரியர் ஒருவர் நிதி திரட்டியுள்ளார். இதனால் தற்போது அந்த ஏழை மாணவிக்கு மீண்டும் பார்வை திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் வசித்து வருபவர் மாதவ் கரயத். மாதம் ரூ.2000 மட்டுமே சம்பாதிக்கும் விவசாயியான இவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ரபினா (15).

இவர் பள்ளியில் படிக்கும்போது, புத்தகத்தைத் தன் கண் அருகில் வைத்துப் படிப்பார். இதனைக் கண்ட அவரின் ஆசிரியர் ரவி பகோதி, ரபினா

வுக்குக் கண்களில் பிரச்னை இருப்பதை அறிந்துகொண்டார். அவரை பித்தோராகர் மற்றும் நைநிடால் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ரபினாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் கண்களில் விழிப்படலம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர். எனவே, அவரின் இரண்டு கண்களிலும் விழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், ரபினாவை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்த னர். அங்கு இத்தகைய‌ அறுவை சிகிச்சை இலவசமாக மேற்

கொள்ளப்படும் என்றாலும், டேராடூனில் இருந்து டெல்லி சென்று தங்கி சிகிச்சைப் பெற சுமார் ரூ. 1 லட்சம் செலவாகும் என்று ரவி பகோதிக்குத் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து இந்தத் தகவலை சமூகவலைதளமான பேஸ்புக்கிலும், 'வாட்ஸ் அப்'பிலும் பகிர்ந்தார். அக்டோ பர் முதல் வாரத்தில் பகிரப்பட்ட இந்தத் தகவலைக் கண்டு பலர் நிதி உதவி அளிக்க முன் வந்தனர். குறைந்தபட்சம் ரூ.11 முதல் ரூ.5,100 வரை பலரும் தங்களால் இயன்ற அளவு நிதியை அளித்தனர். இதற்காக வங்கியில் ரபினாவின் பெயரில் தனி கணக்கு உருவாக்கப் பட்டது. அந்தக் கணக்கில் தற்போது போதுமான நிதி சேர்ந்துள்ளது. இந்நிலை யில், ரபினாவுக்கு அடுத்த மாதம் ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சில வாரங்கள் கழித்து இன்னொரு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரவி பகோதி கூறும்போது, "ரபினாவுக்கு உதவ என்னிடம் போதிய நிதி இல்லை. எனவே இந்தத் தகவலை பேஸ்புக் மற்றும் 'வாட்ஸ் அப்'பில் பகிர்ந்தேன். நிறைய பேர் உதவியது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

இதற்கிடையில், பேஸ்புக், 'வாட்ஸ் அப்' போன்ற சொற்களையே கடந்த சில வாரங்களாகத்தான் ரபினாவுக்குத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x