Last Updated : 01 Mar, 2015 10:03 AM

 

Published : 01 Mar 2015 10:03 AM
Last Updated : 01 Mar 2015 10:03 AM

மத்திய பட்ஜெட் எப்படி?- தலைவர்கள் கருத்து

மத்திய பட்ஜெட் குறித்து தேசிய கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்ததாவது:

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:

இந்தியாவில் தொழில் நடத்துவதை எளிதாக்குவதற்கு உத்தரவாதம் தருவது மட்டுமில்லாமல், பொருளா தார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் இந்த பட்ஜெட் அளிக்கிறது. உலகளாவிய சமூகப் பாதுகாப்பு முறை (யுஎஸ்எஸ்எஸ்) மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் போன்றவை, இந்தியாவில் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும். ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் இரண்டும் இந்தியா வின் தற்போதைய மனநிலையைக் கச்சிதமாகப் பிடித்திருக்கின்றன.

சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்):

பட்ஜெட்டில் புதிதாக ஒன்றும் இல்லை. இது பெருநிறுவனங்களுக்கு சாதகமான பட்ஜெட்.

மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்):

பெரு நிறுவனங்கள், தொழிலதிபர் களுக்கு மட்டும் சாதகமான பட்ஜெட். தேர்தலின் போது பாஜகவை ஆதரித்த பணக்காரர்களுக்கான பட்ஜெட்; ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட் அல்ல. இந்த பட்ஜெட் நடைமுறை சாத்தியமில்லாதது. கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் அரசிடம் ஏராளமான பணம் உள்ளது. ஆனால், அதனை ஏழைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பயன்படுத்தவில்லை. பிஹார், மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் ஏதுமில்லை. பழைய திட்டங்கள் புதிய பெயர்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டும் திட்டம் தொடர்ச்சியான நடைமுறை. இந்திரா ஆவாஸ் திட்டம் தற்போது நடைமுறையில்தானே உள்ளது. ஏழைகளுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால், பல்வேறு துறை களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், ஏழைகளுக்காக பேசுவதற்கு அவர்கள் கூச்சப்படு கிறார்கள்.

ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்):

தேர்தலின்போது பெரு நிறுவனங் களிடமிருந்து நீங்கள் (பாஜக) வாங்கியதை தற்போது திருப்பிக் கொடுக்கிறீர்கள்.

மாயாவதி (பகுஜன் சமாஜ் தலைவர்):

பெரு நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. பணக்காரர்கள், பெரும் முதலாளிகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களின் நலன் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

பி.மஹதாப் (பிஜு ஜனதா தளம்):

இந்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 2 மதிப்பெண்கள் தரலாம். விவசாயிகளுக்கு அதிக பயனில்லாத இந்த பட்ஜெட் அதிருப்தியளிக்கிறது.

ஜெய் பாண்டா (பிஜு ஜனதா தளம்):

தொழிற்சாலைகள், உற்பத்தித் துறை மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மிகச்சிறந்த பட்ஜெட்.

சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்):

பொருளாதார முனைப்புத் திட்டங் கள் இல்லை. உள்கட்டமைப்பு, வேளாண்மை, முதலீடுகளை ஊக்குவிப்பது போன்றவற்றில் ஏமாற்றமளிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வில்லை. சேவை வரி தொடர்பான அறிவிப்புகள், விலைவாசியை அதிகரிக்கச் செய்யும்.

டெரிக் ஓ பிரையன் மற்றும் சுகடா ராய் (திரிணமூல் காங்கிரஸ்):

மக்கள், ஏழைகள், நடுத்தர மக்கள் விரோத பட்ஜெட். மேற்கு வங்க மக்களை ஏமாற்றி விட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி கொல்லன் தெருவில் ஊசி விற்கும் திறமை படைத்தவர் என்பதால், வெறும் பேச்சு மட்டுமே உள்ளது; செயல்பாடுகள் இல்லை.

தருண் கோகோய், அசாம் முதல்வர்:

அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங் களின் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பட்ஜெட்டில் எதுவுமில்லை. வேலைவாய்ப்பு, வெள்ளம், மண் அரிப்பு போன்றவை தொடர்பாக எந்த திட்டங்களும் இல்லை.ஐஐஎம் அமைப்பதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்பு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x