Last Updated : 29 Apr, 2016 10:00 AM

 

Published : 29 Apr 2016 10:00 AM
Last Updated : 29 Apr 2016 10:00 AM

புதிய போக்குவரத்து கட்டுப்பாட்டால் டெல்லியில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு

டெல்லியில் வாகனக்கட்டுப்பாடு காரணமாக புதிய வாகனங்கள் விற்பனை உயரத் தொடங்கியுள் ளது. பழைய சி.என்.ஜி வாகனங் களுக்கும் அதிக வரவேற்பு கிடைக் கத் தொடங்கியுள்ளது. இதனால், வாகனக்கட்டுப்பாடு அதன் பலனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லிக்கு அருகிலுள்ள நொய் டாவின் போக்குவரத்து அலுவலகத் தில் கடந்த வருடம் டிசம்பரில் 1,614 நான்கு சக்கர புதிய வாகனங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், கடந்த ஜனவரி முதல் 15 தினங்களுக் காக சோதனை முறையில் வாகனக் கட்டுப்பாடு அறிமுகப்படுப்பத்தப் பட்டது. இதை அடுத்து, நொய்டா வில் ஜனவரியில் புதிய வாகனங் களின் பதிவு 1,887 என்றாகி 17 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பிறகு பிப்ரவரி மற்றும் மார்ச்சில் முறையே 1,572 மற்றும் 1,576 எனப் புதிய வாகனங்கள் பதிவு வழக்கம் போல் இருந்தது. ஆனால், மீண்டும் ஏப்ரல் 15 முதல் 30 வரை இரண் டாவது முறையாக வாகனக்கட்டுப் பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே, ஏப்ரலில் புதிய வாகனங்கள் பதிவு மீண்டும் உயரத் தொடங்கி விட்டது.

ஏப்ரலின் முதல் பத்து நாட்களில் 712 நான்கு சக்கர புதிய வாகனங்கள் பதிவாகி உள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் ஏப்ரல் இறுதிக்குள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகி விட வாய்ப்புள்ளது. இதன்மூலம், டெல்லிவாசிகள் வாகனக்கட்டுப் பாட்டை சமாளிக்க ஒன்றுக்கும் மேற் பட்ட புதிய வாகனங்கள் வாங்கத் தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, சி.என்.ஜியால் ஓடும் பழைய நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது. இதற்கு, வாகனக் கட்டுப்பாடுகளில் சி.என்.ஜியால் ஓடுபவைக்கு விலக்கு அளிக்கப்பட் டுள்ளது காரணம் ஆகும். டெல்லி யின் கரோல்பாக்கில் பழைய நான்கு சக்கர வாகனங்கள் விற் பனை செய்யும் வியாபாரிகளிடம் சி.என்.ஜி வகை வாகனங்கள் ஒன்று கூட ‘ஸ்டாக்’ இருப்பதில்லை. ஏனெ னில், இந்த அளவுக்கு சி.என்.ஜியால் ஓடும் பழைய வாகனங் களும் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஏற் கெனவே நான்கு சக்கர வாகனங் கள் வைத்திருப்பவர்களே கூடுத லாக மற்றொன்றை விலைக்கு வாங்குவதாகக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் கரோல்பாக்கின் பழைய வாகன வியாபாரியான ஹரீஷ் ஜெயின் கூறும்போது, ‘இரண்டாவதாக சோதனை முறையை அறிவித்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், இனி நிரந்தரமாக ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு வாகனக் கட்டுப்பாடு விதிக்க ஆலோசனை செய்வதாகக் கூறி இருந்தார். இதனால், பலரும் கூடுதலாக மற் றொரு நான்கு சக்கர வாகனம் வாங்கத் தொடங்கி விட்டனர். இதன்மூலம், வாகனக்கட்டுப்பாடு விதிக்கும் நோக்கமே நிறைவேறா மல் போக வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்தார்.

முதலாவதை போல், இரண்டா வது சோதனை முறையிலான வாகனக்கட்டுப்பாட்டிலும் சுற்றுச் சூழல் மாசுக்கள் கட்டுப்பட வில்லை. மாறாக, டெல்லியின் சாலைகளில் வாகனங்கள் போக்கு வரத்து வெகுவாகக் கட்டுப்படுத் தப்பட்டு நெரிசல் ஏற்படாமல் உள்ளது. ஆனால், கூடுதலாக வாகனங்கள் பெறும் அதன் உரிமை யாளர்களால், நெரிசல் குறைவிற் கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள தாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x