Published : 31 Oct 2014 03:06 PM
Last Updated : 31 Oct 2014 03:06 PM
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சிவசேனாவுக்கு பாஜக தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கவுள்ள பட்னவிசும், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, முதன்முறையாக அங்கு ஆட்சியமைக்கிறது. அக் கட்சியின் மாநிலத் தலைவரான 44 வயதுள்ள தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்கிறார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக சிவசேனா கட்சி அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அறிவித்துள்ளது.
இதனையடுத்து பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT