Published : 01 Mar 2015 11:05 AM
Last Updated : 01 Mar 2015 11:05 AM

பட்ஜெட் 2015-16: வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றம் இல்லை

மக்களவையில் நேற்று 2015-16 நிதி யாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், தனி நபர் வருமானத்தில் ரூ.4,44,200 வரை வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் உட்பட 6 மாநிலங் களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் கூடங் குளம் அணு மின் நிலை யத்தின் 2-வது பிரிவில் விரைவில் மின் உற்பத்தி தொடங் கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

90 நிமிட பட்ஜெட் உரை

கடந்த 26-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்களோ, கவர்ச்சிகரமான அறிவிப்புகளோ வெளியிடப்படவில்லை.

அதேபோல பொது பட்ஜெட்டி லும் பகட்டான அறிவிப்புகள் இடம்பெறவில்லை. பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, முதலீடு ஆகியவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் அமைச்சர் அருண் ஜேட்லி சுமார் 90 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜன் தன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, தூய்மை இந்தியா திட்டங்கள் மத்திய அரசின் சாதனைகளை பறைசாற்றுகின்றன. ஜன் தன் திட்டத்தில் கடந்த 100 நாட்களில் 12.15 கோடி குடும்பங்கள் வங்கிச் சேவையைப் பெற்றுள்ளன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டுள்ளது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மேலும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.

அடுத்ததாக, பொதுமக்களின் வங்கிக் கணக்கு, ஆதார் எண், மொபைல் எண் ஆகியவை ஒன்றி ணைக்கப்பட்டு அரசு சேவைகள் எளிமையாக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2016 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும். இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்.

8.5 சதவீத வளர்ச்சி

பணவீக்கம் 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2014-15 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2015-16 நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி விடுவோம்.

2022-ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும், வரும் நிதியாண்டில் நகர்ப்புறங்களில் 2 கோடி வீடுகளும் கிராமப்புறங்களில் 4 கோடி வீடுகளும் கட்டப்படும்.

5 கி.மீ. தொலைவுக்கு ஓர் உயர்நிலைப் பள்ளி அமைக் கப்படும். 80,000 உயர்நிலைப் பள்ளிகள், 75,000 ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த் தப்படும்.இந்திய மக்கள் தொகை யில் மூன்றில் இரண்டு பங்கினர் இளைஞர்கள். அவர்களின் வேலை வாய்ப்புக்காக திறன்சார் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் ஆகிய திட்டங்கள் தீவிரமாக செயல் படுத்தப்படும்.

தங்கத்துக்கு வட்டி

சிறுதொழில் கடன் வழங்கு வதற்காக நாடு முழுவதும் முத்ரா வங்கிகள் தொடங்கப்படும். இந்த வங்கிச் சேவைக்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.

கிராமப்புற மக்களை வங்கிச் சேவையில் இணைக்க நாடு முழுவதும் உள்ள 1,54,000 அஞ்சல் நிலையங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

10 ஆண்டு சிறை

கருப்புப் பணத்தை மீட்க நடப்பு கூட்டத் தொடரிலேயே புதிய சட்டம் தாக்கல் செய்யப்படும். அதன் படி வெளிநாடுகளில் உள்ள சொத் துகள், வருமானத்தை மறைத்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

உள்நாட்டில் கருப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் இயற்றப்படும். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைக்கு பான் எண் கட்டாயமாக்கப் படுகிறது.

ராணுவத்துக்கான ஒதுக்கீடு கடந்த பட்ஜெட்டைவிட 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவத் துக்கு ரூ.2,46,727 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கு ரூ.68,968 கோடி, சுகாதாரத்துக்கு ரூ.33,152 கோடி, மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.10,351 கோடி, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.5,000 கோடி, நிர்பயா நிதிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங் கப்படும். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2-வது பிரிவில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும். இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்

நடுத்தர வர்க்கம் ஏமாற்றம்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படாததால் நடுத்தர வர்க்க மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனினும், தனி நபர் வருமானத்தில் ரூ.4,44,200 வரை வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டி ருப்பது சற்று ஆறுதல் அளிக் கிறது.

மேலும் பட்ஜெட்டில் சேவை வரி 12.3 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்லும் மக்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டி வரும். மேலும் சேவை வரி உயர்த்தப்பட்டிருப்பதால் இன்சூரன்ஸ் பிரீமியமும் அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x