Published : 02 Oct 2014 01:27 PM
Last Updated : 02 Oct 2014 01:27 PM

நிறுவனங்களை முன்வைத்து ஊழல்: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு விவரம்

அதிமுக தலைவர் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் 1991-1996 ஆட்சியின் போது சிலபல நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் முறைகேடு செய்திருப்பதாக சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளையும் இவர்களது சொத்துக்களையும் ஆய்வு செய்த சிறப்பு நீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ”ஜெயலலிதாவுக்காக சொத்துக்களை வாங்கி வைத்திருந்தது என்பதை அரசு தரப்பு வாதம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது.

1991 மற்றும் 1996ஆம் ஆண்டுகளுக்கு இடையே, முக்கியமாக சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மெண்ட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர் வே அக்ரோ புராடக்ட்ஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ், சிங்கோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய 6 வேறுபட்ட நிறுவனங்களில் இணைந்துள்ளனர்.

இந்த நிறுவனங்கள் மேலும் சில நிறுவனங்களுடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீண்டும் இந்த நிறுவனங்களிலும் கூட்டாளிகளாகச் சேர்ந்தனர்.

நீதிபதி இது பற்றி கூறும்போது, 1991ஆம் ஆண்டுக்கு முன்னரே நிறுவனங்கள் இருந்தன என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த நிறுவனங்களில் கூட்டாளிகளாகச் சேர்ந்த பின்பே, வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு நிறுவனங்களின் முழு நிர்வாகக் கட்டுப்பாடு இவர்களிடம் வந்து சேர்ந்தது. ”இந்த நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இந்தக் கணக்குகள் வழியாகவே நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இருப்பினும், கூட்டுறவு நிறுவனங்கள் உட்பட இந்த 18 நிறுவனங்களும் 1991-96ஆம் ஆண்டுகளில் பெரிய அளவுக்கு வணிகம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவு சொத்துக்கள், அதாவது நிறைய நிலங்கள் இந்த நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்டுள்ளன.

வங்கி ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த நடவடிக்கைகளுக்கான தொகை ஜெயலலிதா கூட்டாளியாக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கு மூலம் வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் வாங்கும் நடவடிக்கை மற்ற மூவரையே சாரும் ஜெயலலிதாவுக்கு இந்த நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது என்று டிபன்ஸ் தரப்பினர் வாதிட்டனர். ஆனால் நீதிபதி இந்த வாதத்தினை ஏற்கவில்லை. ஒரு மாநில முதல்வராக அவர் வீட்டில் வசித்தவர்கள் மூலம் நடைபெற்றுள்ள இந்த நடவடிக்கைகள் அவருக்குத் தெரியாது என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார் நீதிபதி.

“குற்றம்சாட்டப்பட்ட முதல் நபர் (ஜெயலலிதா) நிறைய தொகைகளை ஜெயா பப்ளிகேஷன்ஸ் கணக்கில் கொண்டு சேர்ப்பித்துள்ளதும், அங்கிருந்து பிற கணக்குகளுக்கு அது மாற்றப்பட்டுள்ளதும், இந்தத் தொகை பிறகு சொத்துக்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதும் சாட்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மற்ற மூவர்களின் பின்னணியைக் கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிபதி, அவர்களிடம் இது போன்ற பெரிய சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் இல்லை என்றும் கூறினார்.

டிபன்ஸ் தரப்பினர் சட்டபூர்வமான இந்த நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தை வலியுறுத்தியதை நிராகரித்த நீதிமன்றம், ”சுமார் 3000 ஏக்கர்கள் நிலம் என்ற சொத்துகள் சட்டவிரோதமாக குவிக்கப்பட்டது, இந்த சொத்துக்கள் நிறுவனங்களின் பெயரில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் நிறுவனங்களின் பெயரில் உள்ள சொத்துகளை ஒரு தீர்மானம் நிறைவேற்றி அப்புறப்படுத்திவிடலாம் என்ற வசதியைக் கருத்தில் கொண்டே நிறுவனங்களின் பெயர்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கென்று ஆடிட்டர்கள் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டவுடன் நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட நால்வரின் சொந்த ஆடிட்டர்களே கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர். “மேற்கூறிய நிறுவனங்களின் சொத்துக்களாக இவை நோக்க நிறைவேற்றம் பெறவில்லை, எந்த சமயத்திலும் இந்தச் சொத்துக்கள் நிறுவனங்களின் சொத்துகளாகக் கையாளப்படவில்லை, நிறுவனங்களின் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டதைத் தவிர வேறு எதுவும் அது தொடர்பாக நடக்கவில்லை” என்று கூறியது நீதிமன்றம்.

மேலும் வங்கிக் கணக்குகளில் ”விளக்கமுடியா” பெரும் தொகைகள் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளுக்கு பணத்தை கிரெடிட் செய்தவர்கள் ராம் விஜயன் மற்றும் ஜெயராமன் என்ற இருவர்தான். இவர்கள் இருவரும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ஊழியர்கள் என்று நீதிபதி மேலும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட இரண்டாம் நபரின் (சசிகலா) அறிவுறுத்தலின் படி மேற்கூறப்பட்ட வங்கிக் கணக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரின் (ஜெயலலிதா) ஊழியர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். சசிகலாதான் ஜெயலலிதாவின் நிதிவிவகாரங்களை நிர்வகித்து வந்துள்ளார் ஆகவே இந்தப் பணத்திற்கு ஆதாரம் பப்ளிக் செர்வண்ட்தான் (ஜெயலலிதா) என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x