Published : 17 Apr 2014 12:35 PM
Last Updated : 17 Apr 2014 12:35 PM

நரேந்திர மோடி பேட்டி எதிரொலி: இந்தியா டி.வி ஆசிரியர் ராஜினாமா

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பேட்டி எதிரொலியாக இந்தியா டிவி ஆசிரியர் குழு இயக்குநர் கமர் வகீத் நக்வி ராஜினாமா செய்தது அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கேள்வி பதிலை முன்பே திட்டமிட்டு மோடியிடம் பேட்டி கண்டதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று கூறப் படுகிறது.

பத்திரிகையாளர்களுக்கு பாஜகவிடமிருந்து வரும் நெருக்குதல்களுக்கு உதாரணம் இந்த சம்பவம் என காங்கிரஸ் சாடியுள்ளது. நக்வி ராஜினாமா செய்ததை துணிச்சலான செயல் என ஆம் ஆத்மி கட்சி பாராட்டி வரவேற்றுள்ளது.

ஏப்ரல் 13ல் ராஜினாமா

ஏப்ரல் 12ம் தேதி மாலையில் ஆப் கி ஆதாலத் நிகழ்ச்சியில் மோடி பேட்டி ஒளிபரப்பானது. அடுத்த சில மணி நேரங்களில் நக்வி (ஏப்ரல் 13ம்தேதி) ராஜினாமா செய்தார். இந்த பேட்டி கண்டவர் இந்தியா டிவி தலைவரும் முதன்மை ஆசிரியருமான ரஜத் சர்மா.

டிவியில் வெளியான மோடி பேட்டி கிட்டத்தட்ட பொதுமக்கள் தொடர்பு நடவடிக்கை போலவே இருந்ததாக புகார் வெளி யாகவே நக்வி ராஜினாமா செய் தார் என கூறப்படுகிறது. காங் கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி ஆகி யவை நக்விக்கு ஆதரவாக விமர் சனம் வெளியிட்டதும் தனது ராஜி னாமா விவகாரத்தில் யாரும் தலையிடவேண்டாம் என அரசியல் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நக்வி வலைதளத்தில் தெரிவித்தார்.

ஒருதலைப்பட்சம்

இந்நிலையில் மோடிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகவே செய்திகள் வெளியாவதாக இந்தியா டிவியில் உள்ள சிலரே தெரிவித்தனர். ராகுல் மற்றும் கேஜ்ரிவாலுக்கு எதிராக 10 செய்திகள் வெளியானால் மோடிக்கு எதிராக ஒரு செய்தி வெளியிட்டு சரிசெய்துவிடுவார்கள் என்று இந்த டிவியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தமது டிவியில் ஒருதலைப்பட்சமான அரசியல் நிலைப்பாடு ஏதும் இல்லை என்று சர்மா தெரிவித்திருக்கிறார்.

ஆப் கி ஆதாலத் நிகழ்ச்சிக்காக சிறப்பு தேர்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறோம். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்டோரிடம் பேட்டி தரும்படி கேட்டோம்.மோடி மட்டும் ஒப்புக்கொண்டார். மற்றவர்கள் வரவில்லை என்றார் சர்மா.

அகிலேஷ் யாதவ், ராஜ் தாக்கரே உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களிடம் பேட்டி எடுத்துள்ளோம். கடந்த சில மாதங்களாக இதற்கான பணி நடக்கிறது.

மோடி பேட்டியை ஏப்ரல் 7 ம் தேதி படமெடுக்க திட்ட மிட்டோம். அப்போது ரத்தாகவே ஏப்ரல் 10ல் பேட்டி பதிவானது.

நக்வியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. அதனால் நெருக்கடி அதிகமாகவே மோடி பேட்டியை சாக்காக வைத்து ராஜினாமா செய்தார் என்பது தான் சரியானது.

டிவி சேனலுக்காக கடந்த சில மாதங்களில் பெருமளவு முதலீடு செய்துள்ளோம். இப்போதும் அது 3ம் இடத்தில் தான் இருக்கிறது. வெற்றிகரமாக டிவி சானலை மாற்றிக்காட்டுகிறேன் என சொல்லி பொறுப்புக்கு வந்த நக்வி சொன்னதை சாதிக்கவில்லை. இந்தியா டிவி நிகழ்ச்சி தர மதிப்பீடு 6 மாதங்களுக்கு முன் 14.5 புள்ளியாக இருந்தது. இடையில் 11 ஆக குறைந்து கடந்த வாரத்தில் 13 ஐ எட்டியுள்ளது என்றும் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x