Published : 16 May 2015 01:00 PM
Last Updated : 16 May 2015 01:00 PM

நடிகை சன்னி லியோனை நாடு கடத்த இந்து அமைப்பு கோரிக்கை

நடிகை சன்னி லியோனை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன் கனடா நாட்டின் குடியுரிமை கொண்டவர். அவர் நடித்த போர்னோகிராபி படங்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

அண்மைக்காலமாக அவர் மும்பையில் இருக்கிறார். பாலிவுட் திரையுலகில் தடம் பதித்துள்ளார் அவர்.

இந்நிலையில், சன்னி லியோன் தனது ஆபாச இணையதளத்தால் இளம் வயதினர் மனதில் காமத்தை தூண்டுவதாக ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மும்பை காவல் நிலையத்திலும் ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி புகார் அளித்துள்ளது. மேலும் அந்தப் புகார் மனுவில், இளம் நெஞ்சங்களில் ஆபாசத்தை விதைக்கும் சன்னி லியோன் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சன்னி லியோன் போர்னோகிராபி படங்களில் நடித்து வந்தார் என்பதும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மும்பை டோம்பிவாலி காவல் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை சன்னி லியோன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதி. ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதியைச் சேர்ந்த அஞ்சலி பாலன் என்பவர் சன்னி லியோன் மீது புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக டோம்பிவாலி காவல் நிலையம் வெளியிட்ட அறிக்கையில், "34 வயதான நடிகை சன்னி லியோன் மீது கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 292, 292 ஏ, 294 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய மகளிர் பிரதிநிதித்துவ சட்டம், ஐடி சட்டப் பிரிவுகள் 3, 4-ன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x