Last Updated : 28 Oct, 2016 09:40 AM

 

Published : 28 Oct 2016 09:40 AM
Last Updated : 28 Oct 2016 09:40 AM

நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதியில் நீர் மேலாண்மையை சமாளிப்பது பெரிய சவால்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு

‘நகரங்களில் மக்கள் அதிகளவில் குடியேறி வருவதால், நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளில், நீர் மேலாண்மையை சமாளிப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது’ என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

நகரமயமாதல் தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:

இந்திய மக்கள் தொகையின் 31 சதவீதம் பேர், நகரங்களில் வசிக் கின்றனர். அடுத்த 20 ஆண்டுகளில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், நகர்புற இந்தியாவே நாட்டின் மைய நரம்பு மண்டலமாக திகழும்.

டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகர மையங்கள், வளர்ச்சி யின் இயந்திரமாக செயல்பட்டு வருகின்றன. புதிதாக சாட்டிலைட் நகரங்களை உருவாக்குதன் மூலமும், நகரமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய பெருநகரங்களைச் சுற்றி புதிய நகரங்களை உருவாக்குவதும் இதன் ஒரு பகுதியாகும்.

இந்தச் சூழலை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்களில் உள்கட் டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. மின் வினியோக திட்டங்கள், சாலை வசதிகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

பற்றாக்குறை மற்றும் நீர் வளங்களை நிர்வகிப்பதில் உள்ள பிரச்சினைகள் போன்றவை வருங் காலத்தில் மிகப்பெரும் சவாலாக உருவெடுக்கும். இவ்வாறு ஜேட்லி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x