Last Updated : 23 May, 2015 08:39 AM

 

Published : 23 May 2015 08:39 AM
Last Updated : 23 May 2015 08:39 AM

தீவிரவாதிகளை தீவிரவாதிகளால் வேரறுப்போம்: பாகிஸ்தானுக்கு மனோகர் பாரிக்கர் மறைமுக எச்சரிக்கை

தீவிரவாதிகளை தீவிரவாதிகளால் வேரறுப்போம் என மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரி வித்துள்ளார். பாகிஸ்தானுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஏற்பாடு செய் திருந்த நிகழ்ச்சியில் பேசிய மனோகர் பாரிக்கர் இதுதொடர் பாகக் கூறியதாவது:

சில விஷயங்களை என்னால் நிச்சயமாக இங்கு விவாதிக்க முடியாது. பாகிஸ்தான் மட்டும் ஏன் எனது தேசத்துக்கு எதிராக எதையா வது திட்டமிட்டுக்கொண்டே இருக் கிறது. நாங்கள் நிச்சயமாக எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். அவற்றில் நெருக்கடி கொடுக்கும் உபாயங்களும் இருக்கும்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். தீவிரவாதிகளை தீவிரவாதிகளால்தான் வேரறுக்க முடியும். ஏன் அதை நம்மால் செய்ய முடியாது. நாம் அதை நிச்சயம் செய்வோம். ஏன் அதனை எனது ராணுவ வீரர் செய்ய வேண்டும்? (இதுதொடர்பாக மேலும் விவரிக்க அவர் மறுத்துவிட்டார்).

இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளை செயலிழக்க வைக்க ராணுவத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது. எந்தவொரு ஊடுருவல் முயற்சியும் முறியடிக் கப்படும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவும், இதர சேதங்களைத் தடுக்கவும் போதுமான முன்னெச்சரிக்கை களை மேற்கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது. கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தற்போது எல் லையில் உள்ள இடைவெளிகள் சரி செய்யப்பட்டுள்ளன, புலனாய்வு மேம்படுத்தப்பட்டுள்ளது. சரியான செயல்பாடாக இருந்தால் எந்த வொரு சூழலிலும் ராணுவத்துக்கு ஆதரவாக இருப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சியாச்சினில் ஆய்வு

வடக்கு சியாச்சின் பனிமலைப் பகுதியை நேற்று வானில் பறந்தபடி ஆய்வு செய்த மனோகர் பாரிக்கர், அங்குள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கிய பாரிக்கர், ராணுவ தலைமைத் தளபதி தல்பிர் சிங் சுஹாக்குடன் லடாக் பகுதி யிலுள்ள தாய்சீ பகுதியிலிருந்து ஆய்வைத் தொடங்கினார்.

சியாச்சின் முகாமுக்கு ஹெலிகாப்டரில் சென்ற பாரிக்கர், அங்கு போர் நினைவுச் சின்னத் தைப் பார்வையிட்டார் பின்னர், வீரர்களுடன் உரையாடிய அவர், அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, துணிச்சலைப் பாராட்டினார்.

பின்னர், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு தொடர்பான நிலைமை குறித்து வடக்கு சியாச் சின் பகுதி ராணுவ அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆளுநர் என்.என். வோரா மற்றும் முதல்வர் முப்தி முகமது சயீது ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் பாரிக்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x