Published : 31 Aug 2016 12:04 PM
Last Updated : 31 Aug 2016 12:04 PM

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு: துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் பலி

காஷ்மீரின் சோபோர் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில், 15 வயது சிறுவன் கொல்லப் பட்டான். இதன் மூலம், புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு நடந்துவரும் வன்முறைக்கு பலி யானோரின் எண்ணிக்கை, 69-ஆக அதிகரித்துள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிர வாதி புர்ஹான் வானி கொல்லப் பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன் முறையால், காஷ்மீர் பகுதி முழு வதும் 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்தது. கலவரங்கள் தணிந்து சட்டம் ஒழுங்கு நிலவரத்தில் முன்னேற்றம் காணப்பட்டதை அடுத்து, அனைத்து பகுதிகளிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

பதற்றமான பகுதிகளில் மட்டும் கூடுதல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில், வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் உள்ள லோதோராவில் நேற்று வன்முறை வெடித்தது. லோதோரா பகுதியில் பழங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பாதுகாப்புப் படையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்கள், தொடர்ந்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், பாதுகாப்புப் படை யினர் துப்பாக்கிச் சூடு நடத்தி யதில், தானிஷ் மன்சூர் என்ற 15 வயது சிறுவன் மற்றும் ஆறு பேர் படுகாயமடைந்து, சோபோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதில், சிறுவன் மன்சூர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரி வித்தார். இதன்மூலம், கடந்த 53 நாட்களாக காஷ்மீரில் நடந்துவரும் வன்முறைக்கு பலியானோரின் எண் ணிக்கை, 69-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஸ்ரீநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதி களில் ஊரடங்கு தளர்த்தப் பட்டதால், வாகனப் போக்குவரத்து நேற்று அதிகளவில் காணப்பட்டது. அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பணியாளர்கள் வரத்தும் கூடியிருந்தது. எனினும், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடியிருந்தன.

-பிடிஐ

பாஜகவால் மட்டுமே தீர்வு காண முடியும்

- குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் மூத்த தலைவர் (குலாம் நபி ஆசாத்)

ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின், செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

காஷ்மீரின் 70 ஆண்டு வரலாற்றில், தற்போது நிலவும் சூழ்நிலை மிக மோசமானதாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். இவ்விஷயத்தில் அரசின் முயற்சிக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு தரும்.

தற்போது, காஷ்மீர் மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, காஷ்மீர் பிரச்சினைக்கு பாஜகவால் நல்ல தீர்வை வழங்க முடியும். பாகிஸ்தானைப் போல காஷ்மீரை நாம் அணுக முடியாது. காஷ்மீரிகள் நமது மக்கள். அங்குள்ள பெரியவர்களிடம் பேச வேண்டும். ஆத்திரத்தில் உள்ள இளைஞர்களை ஆசுவாசப்படுத்தி, நல்வழிப்படுத்த வேண்டும். இவ்வாறு ஆசாத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x