Published : 26 Apr 2017 11:15 AM
Last Updated : 26 Apr 2017 11:15 AM

டெல்லி மாநகராட்சி தேர்தல்: 137 வார்டுகளில் பாஜக வெற்றி; ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவு

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 137 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (புதன்கிழமை) காலை எண்ணப்பட்டது. ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்துவந்தது.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாஜக 137 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

முனிசிபல் கார்ப்பரேஷன் ஆப் டெல்லி(எம்.சி.டி) எனப்படும் டெல்லி மாநகராட்சியின் தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த 22-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 270 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 53.58% வாக்குகள் பதிவானது. அதாவது மொத்தம் 71.39 லட்சம் வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை விவரம்:

கட்சி

வெற்றி

பாஜக

137

ஆம் ஆத்மி

34

காங்கிரஸ்

21

பகுஜன் சமாஜ் கட்சி



சுயேச்சை



மொத்தம்





11.59 am: டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மகேன் ராஜினாமா.

11.45 am: விஷ்வாஸ் நகர், ஐபி விரிவாக்கம், ப்ரீட் விஹார், முகர்ஜி நகர், ஜிடிபி நகர் ஆகிய இடங்களில் பாஜக வெற்றி.

வடக்கு டெல்லியில் பாஜக 12 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி.

11.40 am: பாஜகவின் மீனாட்சி வடக்கு டெல்லியின் கோஹட் என்கிளேவ் பகுதியில் வெற்றி.

11.30 am: கிழக்கு டெல்லியின் சடாத்பூரில் பாஜகவின் மீடா பிஷ் வெற்றி பெற்றுள்ளார். 2576 வாக்குகள் வித்தியாசத்தில் கரம்புராவில் பாஜகவின் சுனிதா வெற்றி. லட்சுமி பார்க்கில் காங்கிரஸ் வெற்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x