Published : 27 Sep 2014 05:46 PM
Last Updated : 27 Sep 2014 05:46 PM

ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: ட்விட்டரில் பொங்கிய ஆதங்கமும் ஆவேசமும்

18 ஆண்டு காலத்துக்கு பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ட்விட்டரில் இந்த தீர்ப்பு குறித்து விவாதம் வலுத்ததால், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #Jayaverdict முதல் இடத்தை பிடித்தது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அனைவரது பார்வையும் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று(சனிக்கிழமை) ட்விட்டரில் இந்திய அளவில் #Jayaverdict என்ற ஹேஷ்டேக் முதல் இடத்தில் உள்ளது.

அந்த ஹேஷ்டேகில் பலர் இந்த தீர்ப்பு குறித்து தங்களது சுய கருத்துக்களை அளித்து வருகின்றனர். கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று புகார் அளித்தார்.

இதனிடையே ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், தவறு செய்யும் அரசியல் தலைவர்களுக்கு இதன் மூலம் பாடம் கிடைக்கும் என்ற நிலைபாட்டிலும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமெரிக்க பயணம், ஐ.நா. பொது சபையில் அவரது முதல் உரை என்பதான விஷயங்களில் கடந்த இரண்டு நாட்களாக தேசிய ஊடகங்கள் கவனம் செலுத்திய நிலையில், அவை அனைத்தின் கவனமும் முற்றிலும் இன்று(சனிக்கிழமை) ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு மீது திரும்பியுள்ளது.

இவை ட்விட்டரில் பிரதிபலிக்கத் தவறவில்லை. இந்திய அளவில், ஜெயலலிதா சொத்து குவிப்பு குறித்து விமர்சனமும், பல விதமான எதிர்மறை கருத்துக்களையும் இணையவாசிகள் #Jayaverdict ஹேஷ்டேகில் பகிர்ந்து வரும்கின்றனர். அந்த ட்வீட்டுகளில் சில,

ஆர்ச்சீ (@JhaSanjay): இனி ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கடவுளை வேண்ட வேண்டும்.

கிருஷ்ணா (@Krishna #BDL ‏@Atheist_Krishna): என்ன நடிப்புடா... ஆஸ்கர் தான்_ (அதிமுக ஆதரவாளர்கள் ஒப்பாரி வைத்து சோகத்தை அனுசரிக்கின்றனர்)

லதா ஸ்ரீநிவாசன் (@latasrinivasan ): தமிழகம் எங்கம் கலவரமாக உள்ளது என்று செய்திகள் வருகின்றன.

ஜெயசீல பெல்காகுமார் (@jaysheel77): ஒரு சிறிய தவறு பல ஆண்டு கால நல்ல செயல்களை எல்லாம் பாதித்துவிடுகிறது. ஜெயலலிதாவுக்கு பின் அவரது கட்சியை நிகரான ஆளுமையுடன் செயல்பட யாரும் இல்லை.

விக்னேஷ் சுரேஷ் (@VignaSuresh): எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். ஆனால், இந்த நேரத்தில் நமது நீதித்துறையை நினைத்து பெருமைப்படுகிறேன்.

விம்ரம் சந்திரா (@vikramchandra): பெங்களூருவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மனோஜ்குமார் (@Manoj Kumar): எனக்கு தெரிந்த ஒரு அதிமுக ஆதரவாளர், கடவுள் கூட எனது தலைவரை தண்டிக்க முடியாது என்றார். இந்தியாவில் இது போல நிறைய முட்டாள்கள் உள்ளனர்.

மீனாட்சி மகாதேவன் (‏@m_meenakshi86) : அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள். தமிழகத்தின் நிலைமை இப்போது மோசமாக உள்ளது.

ஹரிஹரன் கஜேந்திரன் (@hariharannaidu): வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஜெயலலிதா அதே கம்பீரத்துடன் எழுந்து வருவார்.

வாண்டரிங் மொங்க் (@muralispeak): யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், தீர்ப்புக்கு பின்னரும் ஜெ மீண்டும் எழுந்து வருவார்.

அன்புடன் பாலா (@AmmU_MaanU): ஜெயலலிதா பாடம் கற்கவில்லை. நன்கு தேர்ந்த ஆளுமை பெற்றவர், தகுதி வாய்ந்த முதல்வர். என்ன பயன்? அவர், எது நல்லது, யார் நல்லவர், என்ன செய்வது, என்ன செய்யக் கூடாது என்று அவருக்கு தெரியவில்லையே.

ஸ்ரீநாத் முரளி (@ Srinath Murali_msn): அம்மா என்றும் நினைவில் நிற்பார். ஆனால் இந்த தீர்ப்புக்குப் பின் தமிழகத்தின் நிலைமை என்ன ஆகும் என்று தான் தெரியவில்லை.

கீதா (@ geetdiamonds): அநீதி இழைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் செய்து சிறிய தவறுக்கு, பதவியில் இருக்கும் ஒருவரை தண்டிக்கலாமா? என்ன தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள அரசியல்வாதிகள் தியாகிகளா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x