Last Updated : 18 Dec, 2014 12:36 PM

 

Published : 18 Dec 2014 12:36 PM
Last Updated : 18 Dec 2014 12:36 PM

ஜெயலலிதா ஜாமீன் 4 மாதம் நீட்டிப்பு: மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்தில் முடிக்கவேண்டும்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜெயலலி தாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க சிறப்பு அமர்வை நியமிக்கவும் மூன்று மாதங்களுக்குள் விசா ரணையை முடிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் பேரில் அவருக்கு கடந்த அக்டோபர் 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அவரது ஜாமீன் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி ஆஜரானார். அவர் வாதாடியபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து ஆவணங் களும் கர்நாடக உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கில் உங்கள் தரப்பு வாதங் களை முன்வைக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்டனர்.

‘30 வேலை நாட்கள் தேவைப்படும்’ என்று கே.டி.எஸ். துளசி பதிலளித்தார்.

அதனை கணக்கிட்ட நீதிபதிகள், 30 வேலை நாட்கள் என்றால் இரண்டு மாதங் களாகிவிடும். மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் நீதிபதி தீர்ப்பெழுத ஒரு மாதம் ஆகும். மொத்தம் 3 மாதங்கள் தேவைப் படும். தவிர்க்க முடியாத காரணங் களால் மேலும் 15 நாட்கள்கூட அதிகமாகலாம் என தெரி வித்தனர்.

விசாரணையின்போது நீதி மன்றத்தில் ஆஜராகி இருந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் உங்கள் தரப்பு கருத்து என்ன என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அவர், மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான ஆவணங் களை தன்னிடம் அளிக்க வில்லை என்று தெரிவித் தார். அந்த ஆவணங்களை சுப்பிரமணியன் சுவாமியிடம் அளிக்க கே.டி.எஸ்.துளசிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழுந்துள்ளது என்றும் நீதிபதிகளிடம் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார்.

அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்று கூறினர்.

சிறப்பு அமர்வு நியமனம்

இறுதியில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில் கூறியதாவது:

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன் 2015 ஏப்ரல் 18-ம் தேதி வரை நான்கு மாதங்களுக்கு நீட்டிக் கப்படுகிறது.

ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வை நியமிக்க வேண்டும். அது ஒரு நீதிபதி அல்லது டிவிஷன் அமர்வாக இருக்கலாம். மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x