Published : 01 Mar 2015 10:26 AM
Last Updated : 01 Mar 2015 10:26 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முஃப்தி முகமது சயீத் இன்று பதவியேற்கிறார்.
பாஜக-வுடன் கூட்டணை அமைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி அங்கு ஆட்சியமைக்கிறது. நீண்ட நாளைய இழுபறிக்குப் பிறகு இந்த கூட்டணி மலர்ந்துள்ளது.
அமைச்சரவையில் இரு கட்சியினருக்கும் சமபங்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதில் பாஜக-வின் நிர்மல் சிங்குக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் வோரா பதவியேற்பு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT