Last Updated : 23 May, 2015 08:44 AM

 

Published : 23 May 2015 08:44 AM
Last Updated : 23 May 2015 08:44 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதா வழக்குக்கு சவால் விட்ட பவானி சிங் வழக்கு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த ஆச்சார்யா ராஜினாமா செய்ததால் 'அடுத்த அரசு வழக்கறிஞர் யார்?' என்ற கேள்வி எழுந்தது.

சி.வி.நாகேஷ், ரவி வர்ம குமார், நானையா, பூவையா, அரளி நாகராஜ் ஆகிய 5 மூத்த வழக்கறிஞர் களை அரசு வழக்கறிஞர் பொறுப் புக்கு பரிசீலிக்குமாறு கர்நாடக அரசு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை பட்டியல் அனுப்பியது. ஆனால் அப் போதைய கர்நாடக உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தர் ராவ், பட்டியலில் இடம்பெறாத பவானிசிங்கை ஜெயலலிதா வழக் கில் அரசு வழக்கறிஞராக நிய மித்தார். இந்த தர் ராவ்தான் நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவையும் நியமித்தார்.

நீதிமன்றத்துக்கு வந்த முதல் நாளே பவானிசிங், வழக்கின் ஆவணங்களை படிக்க 3 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. மீண்டும் நீதி மன்றம் கூடியதும் ஜெயலலிதா தரப்பு, சொத்துக்குவிப்பு புகாரை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப் புத்துறை டி.எஸ்.பி. சம்பந்தத்தை குற்றவாளிகள் தரப்பு சாட்சியாக விசாரித்தது. அதற்கு பவானிசிங் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து ஜெயலலிதா தரப் பால் நீதிமன்றத்துக்கு அழைத்து வ‌ரப்பட்ட சாட்சிகளை பவானிசிங் குறுக்கு விசாரணை செய்தார்.

'சுதாகரனின் திருமணத்துக்கு நாங்கள் தான் செலவு செய்தோம். நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு நாங்கள் தான் சந்தா செலுத்தி னோம். சூப்பர் டூப்பர் டிவிக்கு நாங்கள் தான் கேபிள் ஆப்ரேட்டராக இருந்தோம்' என அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை பவானிசிங் குறுக் கிடாமல் அப்படியே பதிவு செய் தார். ஜெயலலிதா தரப்பு இறுதி வாதத்தை முடித்த மறுநாளே பவானிசிங் இறுதிவாத‌த்தை தொடங்கினார்.

வழக்கு முடியும் நிலையில் பவானிசிங், ''ஜெயலலிதாவின் 1,116 கிலோ வெள்ளிப் பொருட் களை வைத்துள்ள பாஸ்கரனை விசாரிக்க வேண்டும்'' என்று மனு போட்டார். ஆனால் மறுநாளே திமுக வழக்கறிஞர் சரவணன், ''பாஸ்கரன் இறந்து பல மாதங்கள் ஆகிறது. இறந்து போன ஒருவரை அரசு வழக்கறிஞர் விசாரிக்க ஆசைப்படுகிறாரே?'' என இறப்பு சான்றிதழை காண்பித்து கேட்டார். இதனால் கோபமடைந்த நீதிபதி குன்ஹா, 'இனியும் காலம் தாழ்த் தாமல் இறுதிவாதத்தை தொடங்க வேண்டும்' என பவானிசிங்குக்கு உத்தரவிட்டார்.

ஆனால் பவானிசிங் நீதிமன்றத் தில் ஆஜராகாமல், 'தனக்கு உடல் நிலை சரியில்லை' எனக்கூறி மருத்துவ சான்றிதழை அனுப்பி னார். ஆனால் அதில் மருத்துவரின் பெயரோ, முகவரியோ, தேதியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதைப் பார்த்த குன்ஹா, பவானி சிங்கின் 2 நாள் ஊதியமான ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை அபராத மாக விதித்தார். கர்நாடக நீதிமன்ற வரலாற்றில் நீதிமன்றத்தில் ஆஜ ராகாமல் இருந்த‌தற்காக அபராதம் பெற்ற முதல் அரசு வழக்கறிஞரான பவானிசிங் மறுநாள் கோபத்தோடு வந்தார்.

‘என்னால் நீண்ட நேரம் நின்று கொண்டு வாதிட முடியாது. எனது ஜூனியர் முருகேஷ் எஸ்.மரடி வாதிடுவார்' எனக்கூறி விட்டு அமர்ந்தார். இறுதிவாதம் முடிந்த நிலையில் ஜெயலலிதா தரப்பை குற்றவாளிகள் என குன்ஹா தீர்ப்பளித்தார் போது, 'ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க நான்தான் காரணம்' என பவானிசிங் பேட்டி அளித்தார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் போது, அதிலும் பவானிசிங் ஆஜராக வேண்டுமென தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே நாளில் அரசாணை தயாரித்தது. இதை பவானிசிங்கிடம் கொடுப்பதற்காக அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்ற போது கடிதத்தை வாங்க மறுத்தார்.

மறுநாள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என எதிர் பார்த்த நிலையில் நீதிமன்றத்துக்கு வந்த பவானிசிங், 'எனது நியமனத் துக்கான அரசாணை வழங்கப் படாததால் ஆஜராக முடியாது' என எழுந்து சென்றார்.

மேல்முறையீட்டில் பவானிசிங் அதிக ஊதியம் கேட்டு மிரட்டிய போதும், திடீரென ராஜினாமா கடிதத்தை நீட்டிய போதும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் அதிர்ந்தனர்.

பவானிசிங்கை நீக்க வேண்டும் என திமுக மீண்டும் மனுதாக்கல் செய்தது. இதனை பவானிசிங் கண்டுகொள்ளாமல் இருக்க ஜெய லலிதா தரப்பு அவருக்காக பெரிய வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து லட்சக்கணக்கில் செலவு செய்தது. திமுக இடைவிடாமல் போராடி யதை தொடர்ந்து கடந்த 27-ம் தேதி பவானி சிங்கை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப் போது, 'எனக்கு விடுதலை கிடைத்து விட்டது' என நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் உற்சாக மாக தெரிவித்தார் பவானி சிங்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் வழக்கறிஞராக ஆஜரான ஜோதியின் ஜூனியர் சந்திரசேகர் 2001-ல் அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜோதியின் சொல்படி நடந்துகொண்ட சந்திர சேகரின் செயல்பாட்டை காரணம் காட்டியே வழக்கு பெங்களூரு வுக்கு மாற்றப்பட்டது. அதே போல 2014-ல் அதிமுக ஆட்சியால் நியமிக்கப்பட்ட பவானி சிங்கை நீக்கியது உச்ச நீதிமன்றம்.

முருகேஷ் எஸ். மரடிக்கு அநீதி

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த‌ பவானி சிங்குக்கு ஜூனியராக முருகேஷ் எஸ்.மரடி நியமிக்கப்பட் டார். நீதிபதி குன்ஹா முன்னி லையில் பவானிசிங்குக்கு பதிலாக 10 நாட்களுக்கும் அதிகமாக‌ வாதாடி, ஜெயலலிதாவுக்கு தண்டனை வாங்கி தந்தவர்.

கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் ஜூனியர் வழக்கறிஞராக தொடர்ந்த மரடிக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சரியான முறையில் ஊதியம் வழங்கவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இவ்வழக்கில் இருந்து மரடி விலகினார்.

யார் இந்த கிர்ஜி?

மரடியின் விலகலுக்கு பிறகு சதீஸ் கிர்ஜி என்பவரை புதிய ஜூனியராக பவானிசிங் சேர்த்துக் கொண்டார். எவ்வித உத்தரவும், நியமன ஆணையும் இல்லாமல் மேல்முறையீட்டில் ஆஜரான இந்த கிர்ஜி ஒரு அரசு வழக்கறிஞ ரைப் போல செயல்பட்டார். “யார் இந்த கிர்ஜி?” என பவானிசிங்கிடம் கேட்டால், “உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்பார். கர்நாடக உயர்நீதிமன்ற வட்டார‌த்தில் விசாரித்தால், “யார் இந்த கிர்ஜி?” என அதே கேள்வியை திரும்பி கேட்கிறார்கள்.

(இன்னும் வருவார்கள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x