Last Updated : 09 Feb, 2016 08:37 AM

 

Published : 09 Feb 2016 08:37 AM
Last Updated : 09 Feb 2016 08:37 AM

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

சியாச்சின் முகட்டில் பனிச்சரிவில் சிக்கி 25 அடி ஆழத்தில் புதைந் திருந்த ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 9 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சியாச்சின் பனிமுகட்டில் மெட்ராஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3-ம் தேதி இப்படைப்பிரிவு முகாம் மீது பனிச்சரிவில் விழுந்து அமுக்கி யதில், ஓர் இளநிலை அதிகாரி (ஜேசிஓ) உட்பட 10 வீரர்கள் புதை யுண்டனர். நவீன கருவிகள், ரேடார், மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்தது. இந்நிலை யில் நேற்று ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கொப்பட் என்ற வீரர், பெரும் பனிப்பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டிருந்தார். அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்த மருத்துவக் குழுவினர் அவரை பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நிலைமை மோசமாக உள்ளது.

இதுகுறித்து வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ் ஹூடா கூறும்போது, “இது மெத்தென்ற பனியைக் கொண்ட பனிச்சரிவல்ல. கற்களால் ஆன சுவரைப்போன்ற கடினமான பனி சரிந்து மூடியுள்ளது. 2 இரவுகளைத் தவிர, மற்ற நாட்களில் இரவும் பகலும் மீட்புப் பணி தொடர்ந்தது. இந்த முயற்சியின் பயனாக ஒரு நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.

ஹனுமந்தப்பா, 25 அடி ஆழத் தில் புதையுண்டிருந்தபோதும் சுவா சிக்க போதுமான அளவுக்கு காற்று கிடைத்தது. அவரைச் சுற்றி காற்றுக் குமிழ் இருந்ததால், அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்பு பணி நிறைவு

இதனிடையே, எஞ்சிய 9 வீரர் களின் சடலங்கள் மீட்கப்பட்டு விட்ட தால், மீட்புப் பணி நிறைவடைந்தது என லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தர்வாத் பகுதியைச் சேர்ந்த ஹனுமந்தப்பா வின் தந்தை, தன் மகன் உயிருடன் மீட்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந் துள்ளார்.

பிரதமர் சந்திப்பு

இதுதொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில், “ஹனுமந்தப்பா வின் மனஉறுதி, பொறுமையை விளக்க வார்த்தைகளே இல்லை. அவர் மிகச்சிறந்த வீரர். அவருக்காக பிரார்த்திப்போம். நாட்டு மக்களின் பிரார்த்தனைகளுடன் மருத்துவ மனையில் அவரைச் சந்திக்கச் செல்கிறேன்” என தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x