Last Updated : 09 Feb, 2016 03:41 PM

 

Published : 09 Feb 2016 03:41 PM
Last Updated : 09 Feb 2016 03:41 PM

சியாச்சினில் மீட்கப்பட்ட ராணுவ வீரருக்கு தீவிர சிகிச்சை: பிரதமர் மோடி நேரில் பார்வை

சியாச்சின் பனிச் சரிவிலிருந்து 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரரை பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார்.

லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவை நேற்று (திங்கள்கிழமை) ராணுவ மீட்புக் குழு மீட்டது. அவர் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை சந்திப்பதற்கு முன்னதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பாவை காணச் செல்கிறேன். தேச மக்களின் பிரார்த்தனைகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தீவிர சிகிச்சை:

ஹனுமந்தப்பா உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாகவும் ராணுவ மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

5 சடலங்கள் மீட்பு:

இதுவரை ஐவர் சடலங்கள் பனிச்சரிவுகளுக்கு இடையேயிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 4 பேரது உடல் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் வடக்கு படைப் பிரிவு லெப்டிணன்ட் ஜெனரல் ஹூடா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x