Published : 31 Aug 2016 04:04 PM
Last Updated : 31 Aug 2016 04:04 PM

சிங்குர் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவால் டாடா மோட்டார்ஸுக்கு பின்னடைவு

நானோ கார் உற்பத்தி செய்வதற் காக 2006-ம் ஆண்டு 997.11 ஏக்கர் நிலத்தை மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடா மோட்டார்ஸ் நிறு வனம் கையகப்படுத்தியது. இந்த நிலத்தை மீண்டும் விவசாயி களிடம் திரும்ப கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத் துக்கு பெரும் பின்னடைவாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் புத்ததேவ் பட்டாச் சார்யா முதல்வராக இருந்த சமயத் தில் இந்த நிலத்தை டாடா மோட் டார்ஸ் வாங்கியது. தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி அப்போதிருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

நிலத்தின் உரிமையாளர்களிடம் இன்னும் 12 வாரங்களில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்திருக்கிறது. இந்த நிலம் கையகப்படுத்தியது சட்ட விரோதமானது. நிலம் கையகப் படுத்தல் சட்டத்தை முறையாகக் கடைபிடிக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதி கவுடா கூறும்போது, இந்த நிலம் தனிப்பட்ட நிறுவனத்தின் நலனுக்காக கைப்பற்றப்பட்டதே தவிர, இதில் பொது நலன் இல்லை என்று கூறியிருக்கிறார்.

2006-ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்தியதில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டத்தில் இறங்கியது. அதன் காரணமாக இந்த திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைவிட்டது.

2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பேற்றவுடன் இந்த நிலத்தை திருப்பி எடுத்துக் கொள்வதாக சட்டம் இயற்றினார். அதனை தொடர்ந்து டாடா நானோ ஆலைத் திட்டம் குஜராத் மாநிலம் சனந்த் மாவட்டத்துக்கு சென்றது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கல்கத்தா உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது டாடா மோட்டார்ஸ்.

மேற்கு வங்க அரசு நிலத்தைத் திருப்பி கொடுக்க கூடாது என்றும், கல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. கல்கத்தா உயர் நீதிமன்றம் மேற்கு வங்க அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து 2011-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது டாடா மோட்டார்ஸ்.

ஏற்கெனவே இந்த ஆலை வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதால் கையகபடுத்திய நிலத்தை விவசாயிகளிடம் திருப்பி கொடுப்பதை டாடா மோட்டார்ஸ் பரிசீலனை செய்யலாம் என்று 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கூறியது. ஆனால் சிங்குர் நிலம் தங்களுக்குத் தேவை என உச்ச நீதிமன்றத்தில் டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போதைய தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

`நிம்மதியாக இறப்பேன்’

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எனக்கு முக்கியமான வெற்றியாகும். தேர்தல் வெற்றியைத் தவிர எனக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான பணி இந்த நிலத்தை விவசாயிகளிடம் திருப்பி கொடுப்பதுதான். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த நிலத்தை விவசாயிகளிடம் திருப்பிக் கொடுப்பேன். இனி நான் நிம்மதியாக இறப்பேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த நிலத்துக்காக 26 நாட்கள் மம்தா உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x