Last Updated : 17 Sep, 2014 03:11 PM

 

Published : 17 Sep 2014 03:11 PM
Last Updated : 17 Sep 2014 03:11 PM

சாரதா நிதி நிறுவன மோசடியில் விசாரிக்கப்பட்ட முன்னாள் டி.ஜி.பி. தற்கொலை

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வந்த அஸ்ஸாம் மாநில முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பருவா துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் அஸ்ஸாம் மாநில டி.ஜி.பி. சங்கர் பருவா, கடந்த வாரம் சி.பி.ஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பரோவாரியில் உள்ள தனது வீட்டில் சங்கர் பருவா இன்று (புதன்கிழமை) சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பரோவாரி காவல் நிலைய கண்காணிப்பாளர் ஏ.பி. திவாரி, 'தி இந்து' செய்தியாளரிடம் கூறும்போது, "முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பருவா இன்று மதியம் அவரது சொந்த உரிமத்தில் பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு, மருத்து பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சங்கர் பருவா இன்று காலை 11.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்" என்றார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் அஸ்ஸாம் மாநில போலீஸார், சங்கர் பருவா வீட்டிற்கு விரைந்து சோதனை நடத்தினர். தற்கொலை செய்துகொண்ட சங்கர் பருவா, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2012-ஆம் ஆண்டு வரை அஸ்ஸாம் மாநில டி.ஜி.பி-யாக பதிவி வகித்தார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சங்கர் பருவாவின் வீடு, வங்கிக் கணக்குகள் மற்றும் அலுவலக குறிப்புகளை ஆகஸ்ட் 28-ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்திருந்தனர்.

அதே நாளில் அஸ்ஸாம் மாநில சுகாதார அமைச்சர், கல்வித் துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, அவரது மனைவி மற்றூம் நியூஸ் லைவ் செய்தி சேனலின் நிறுவன உரிமையாளர் ரினிக்கி புயான் உள்ளிட்ட 11 பேரின் வீடு மற்றும் அலுவலகங்கள் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x