Published : 05 Mar 2015 07:19 PM
Last Updated : 05 Mar 2015 07:19 PM

சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப திட்டமில்லை: பிபிசி

"இந்தியாவின் மகள்" என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்பும் திட்டமில்லை என்று பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்தியாவை உலுக்கிய டிச.16, 2012 பாலியல் பலாத்கார விவகாரம் பற்றிய ஆவணப்படம் பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அதாவது, இந்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப் பட மாட்டாது என்று உள்துறை அமைச்சகத்துக்கு பிபிசி தெரிவித்திருப்பதாக சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆவணப்படத்தை எடுக்க குறிப்பிட்ட அனுமதி விதிமுறைகளை கடைபிடிக்காததன் காரணமாக இயக்குநர் லெஸ்லி மீது மத்திய அரசு சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறது. மேலும் பிரிட்டனில் ஒளிபரப்பியதற்காக பிபிசி மீதும் மத்திய அரசு சட்ட நடவடிக்கைக்கு பரிசீலித்து வருகிறது.

திஹார் சிறையில் இந்த ஆவணப்படத்துக்காக, டிச.16 சம்பவத்தில் அந்தக் குறிப்பிட்ட பேருந்தை ஓட்டிச் சென்ற குற்றவாளி, முகேஷ் சிங் என்பவரது பேட்டி இடம்பெற்றதும், அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளும் பெரும் பிரச்சினைகளைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x