Published : 02 Oct 2014 02:26 PM
Last Updated : 02 Oct 2014 02:26 PM

சச்சின், கமல்ஹாசனை தூய்மை இந்தியா சேலஞ்சிற்கு அழைத்த பிரதமர் மோடி

ஸ்வச் பாரத் அல்லது தூய்மை இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் புதிய விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக அவர் மாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இன்று அவர் இதற்காக இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் பெயர்களைக் கூறி அவர்களும் தன்னுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழிலதிபர் அனில் அம்பானி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், யோகா குரு ராம்தேவ், உள்ளிட்ட ஆளுமைகளை தனது தூய்மை இந்தியா சவாலுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதாவது இவர்களும் பிரதமர் மோடியின் வழியைப் பின்பற்றி தெருவில் குப்பையை அகற்றி அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதோடு, பொதுமக்களும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து #mycleanindia என்ற ஹாஷ் டாக்கை பயன்படுத்தி பதிவேற்றுமாறு கூறியுள்ளார். மேலும் 9 பேரை இந்த சவாலை ஏற்கவருமாறு அழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அழைப்பிற்கு செவி சாய்த்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, “பிரதமர் மோடியின் இந்த சவாலை ஏற்கக் கடமைப்பட்டுள்ளேன்” என்று உடனே ட்வீட் செய்துள்ளார். 2019-ற்குள் நாட்டை தூய்மை இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரும், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த சவாலை ஏற்பதாக வீடியோ பதிவேற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x