Last Updated : 09 Feb, 2016 08:31 AM

 

Published : 09 Feb 2016 08:31 AM
Last Updated : 09 Feb 2016 08:31 AM

குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சியில் கூடுதல் கவனம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவு

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு இத்துறையின் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (Micro, Small and Medium Enterprises MSME) மேம்பாட்டுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன (எம்எஸ்எம்இ) வளர்ச்சி சட்டம் 2015’ கொண்டு வரப்பட் டது. இதன்படி, மத்திய, மாநில அரசுகளின் பொது நிறுவனங் கள் தங்களுக்கு தேவையான பொருட்களில் 20 சதவீதம் எம்எஸ்எம்இ நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் இந்த 20 சதவீதத்தில் 4 சதவீதப் பொருட்கள் எஸ்சி, எஸ்டி தொழில்முனைவோரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது.

இந்நிலையில் ‘எம்எஸ்எம்இ வளர்ச்சி சட்டம் 2015’ மீதான ஆய்வுக் கூட்டம் இத்துறையின் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தலைமையில் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அத்துறையின் செயலாளர் கே.கே.ஜலால், கூடுதல் செயலா ளர் சுரேந்திரநாத் திரிபாதி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், பொது நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எம்எஸ்எம்இ நிறுவனங்களிடம் மேற்கொள்ள வேண்டிய கட்டாய கொள் முதல் குறித்து ஆய்வு செய்யப் பட்டது.

இதில் இந்த நிறுவனங்களில் 20 சதவீதத்துக்கு பதிலாக 10 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தெரியவந்தது. இத்துடன் எஸ்சி, எஸ்டி உரிமை யாளர்களிடம் இருந்து 4 சதவீதத் துக்கு பதிலாக 0.2 சதவீதம் மட்டுமே பொருட்கள் கொள் முதல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மீது மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மிகுந்த கவலை தெரிவித்தார்.

இந்த சட்டத்தை அமல்படுத்து வதில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்யவும், இச்சட்டம் முறையாக அமல்படுத்தப்படு கிறதா என தொடர்ந்து கண் காணிக்கவும் தனது அமைச்சக அதிகாரிகளுக்கு கல்ராஜ் மிஸ்ரா உத்தரவிட்டார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய அரசின் பொது நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “எங்களுக்குத் தேவையான பொருட்கள் பெரிய நிறுவனங் களிடம் இருந்து எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைக் கிறது. எம்எஸ்எம்இ நிறுவன பொருட்களில் தரம், விலை, குறித்த நேரத்தில் டெலிவரி, எதிர்பார்க்கும் சேவைகள் போன்ற வற்றில் பல்வேறு பிரச்சினை ஏற்படுகிறது. என்றாலும் சுய லாபம் காரணமாக பலர் பெரு நிறுவனங்களிடமே அனைத்து பொருட்களையும் வாங்குவதும் உண்டு. எம்எஸ்எம்இ வளர்ச்சி சட்டத்தை கடுமையாக்கினால் தான் 20 சதவீத அளவை பூர்த்தி செய்ய முடியும்” என்றார்.

நாட்டில் மத்திய அரசு பொது நிறுவனங்கள் 254 உள்ளன. மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்கள் இதைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளன. எம்எஸ்எம்இ துறையில் நாடு முழுவதிலும் சுமார் 39 லட்சம் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த துறையை வளர்க்கும் பொருட்டு புதிய தொழில் முனைவோருக்கான பதிவை இணையதளத்தில் செய்யலாம் என மத்திய அரசு கடந்த செப்டம்பரில் அறிவித்தது.

இதன் பிறகு தற்போது வரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் நிறுவனங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய் துள்ளனர். இந்த துறையின் கீழ் கைத்தறி, கயிறு திரித்தல் போன்ற தொழில்கள் முதல் அனைத்து வகையான உற்பத்தி மற்றும் அது தொடர்பான சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x