Published : 30 Jul 2014 08:53 PM
Last Updated : 30 Jul 2014 08:53 PM

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தை பார்வையிட விருப்பமா?

ஆகஸ்ட் 1-ல் இருந்து குடியரசு தலைவர் மாளிகை அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியில் இருந்து பொது மக்கள் பார்வையிடலாம். ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அருங்காட்சியகம் திறந்திருக்கும்.

அன்னை தெரசா கிரசென்ட் சாலையில் உள்ள கதவு எண்.30 வழியாக பொதுமக்கள் அருங்காட்சிக்கு சென்றுவரலாம்.

இதற்கான நுழைவு அனுமதியை குடியரசு தலைவர் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். >www.presidentofindia.nic.in

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 வரை அருங்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். நவம்பர் 1 முதல் நபர் ஒருவருக்கு ரூ.25/- நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும். (12-வயது உட்பட்ட குழந்தைகள் தவிர)குழுவாக சென்று பார்வையிடும்போது 30 நபர்களுக்கு ரூ.600/- வசூலிக்கபடும். இந்த குடியரசு மாளிகை அருங்காட்சியகத்தில் குடியரசு மாளிகையின் தோற்றம் மற்றும் வரலாறு பற்றி ஒலி-ஒளியோடு அனிமேஷன் மூலம் எடுத்துரைக்கப்படும்.

ஆயுதங்கள் ஏந்தி வீரர்களை கொண்ட போர்க்கலம் உருவாக்கபடுத்தப்பட்டுள்ளது. வைஸ்ராயின் இல்லத்திற்காக சர் எட்வில் லுடியென்ஸ் வடிவமைத்த மரச்சாமான்களின் மாதிரிகள், சடங்கு பெட்டிகள், புகைப்படங்கள், 19-வது நூற்றாண்டின் ஒவியங்கள் என பல அம்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x