Last Updated : 28 Oct, 2016 10:10 AM

 

Published : 28 Oct 2016 10:10 AM
Last Updated : 28 Oct 2016 10:10 AM

காச நோயை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது: அமிதாப் பச்சன் வலியுறுத்தல்

காச நோயை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது என்று நடிகர் அமிதாப் பச்சன் வலியுறுத்தினார்.

நுரையீரல் பாதுகாப்பு தொடர்பான 4 நாள் சர்வதேச மாநாடு, பிரிட்டனின் லிவர்பூல் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 130 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 பிரதிநிதி கள் இம்மாநாட்டில் பங்கேற் றுள்ளனர்.

இம்மாநாட்டில் நடிகர் அமிதாப் பச்சனின் வீடியோ உரை வெளியிடப்பட்டது. இதில் அமிதாப் கூறும்போது, “காச நோயை முடிவுக்கு கொண்டு வருவதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது. நம் ஒவ்வொருவர் நாட்டிலும் காசநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதில் நம் அரசியல் தலைவர்கள் தீவிர கவனம் செலுத்துவது அவசியம்.

காசநோயை எளிதாகக் கண்டறிய புதிய சோதனை முறை நமக்கு தேவை. மேலும் சிகிச்சை காலத்தைக் குறைக்கும் வகையிலான மருந்துகளும் வேண்டும்.

காசநோய்க்கு சக்திவாய்ந்த தடுப்பூசியும் நமக்கு முக்கியத் தேவையாக உள்ளது. கடந்த 2000 ஆண்டில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நான் நடத்தி வந்தபோது, காசநோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆதரவால் காசநோயில் இருந்து நான் மீண்டு, பணியை தொடர்ந் தேன். துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் எல்லா காச நோயாளிகளும் என்னைப் போல் தரமான சிகிச்சையும் கவனிப்பும் எடுத்துக்கொள்ள முடியாது. காசநோயாளிகள் பலருக்குத் தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

மேலும் பக்க விளைவுகள் மற்றும் நீண்ட சிகிச்சைக் காலம் காரணமாக பலர் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்தி விடுகின்றனர்.

காசநோயால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மூலம் பரவும் தொற்றுநோயாக இது இருப்பதால் ஏழைகள் மட்டுமின்றி அனைவரையும் இந்நோய் பாதிக்கிறது” என்றார்.

இந்தியாவில் காசநோயை முடிவுக்கு கொண்டுவருவதற் காக கடந்த 2015 ஏப்ரலில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் புதிய இயக்கம் தொடங்கப் பட்டது. இதன் தூதராக அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறு வனம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x