Last Updated : 16 Apr, 2014 09:27 AM

 

Published : 16 Apr 2014 09:27 AM
Last Updated : 16 Apr 2014 09:27 AM

காங்கிரஸ், பாஜகவை ஆதரித்து கர்நாடகத்தில் எழுத்தாளர்கள் தேர்தல் பிரச்சாரம்

கர்நாடகத்தில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து ஞான பீட விருது, சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஞான பீட விருது பெற்ற கன்னட எழுத்தாளரும், நாடக ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான கிரீஷ் கர்னாட் பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் நந்தன் நிலகேனிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பா.ஜ.க. பொதுச்செயலாளரும், வேட்பாளரு மான அனந்தகுமார் இந்த தொகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என துண்டு அறிக்கைகளை விநியோகித்து வாக்கு சேகரித்தார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற கன்னட எழுத்தாளர் மரளுசித்தப்பாவும் நந்தன் நிலகேனியை ஆதரித்து வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார். ஜெயநகரில் உள்ள பூங்காவில் ‘நந்தன் நிலகேனி வெற்றி பெற வேண்டும், ஏன்?' என்ற தலைப்பில் விவா தமேடை யும் நடத்தினார்.

மோடி பிரதமராகக் கூடாது

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளரும், அரசியல் விமர்சகரு மான யூ.அனந்த்மூர்த்தி பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் தலைமையில் பெங்களூரில் நடை பெற்ற கருத்தரங்கில் பல எழுத்தாளர் களும், நிறைய இலக்கி யவாதிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

யூ.ஆர்.அனந்த்மூர்த்தி பேசுகை யில், ‘‘நரேந்திர மோடி நாட்டின் பிரத மராகக் கூடாது அவர் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் முகமூடியாக திகழ்கிறார். இதுவரை இந்தியா சர்வாதிகாரியைக் கண்டதில்லை. மோடி வடிவில் சர்வாதிகாரி உருவாகி வருகிறார்''என கடுமையாக சாடினார்.

குஜராத்தில் சிறுபான்மையின மக்கள்மீது நடத்தப்பட்ட வன்முறை களை விவரிக்கும் ’மோடியின் அட்டூ ழியங்கள்' என்ற தலைப்பிலான புத்த கத்தை கன்னட எழுத்தாளர் மாவள்ளி சங்கர் வெளியிட்டார். அவர் மோடியை எதிர்த்து கர்நாடகா முழுவதும் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள்

பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் சில எழுத்தாளர்கள் பிரச்சாரம் செய்தனர். கன்னட எழுத்தாளர் மகாபால மூர்த்தி கொட்லிகரே 'மோடி வருக' என்ற தலைப்பில் மோடியின் சாத னைகளை புத்தகமாக எழுதி இருக் கிறார். முன்னாள் முதல்வர் எடியூரப் பாவை ஆதரித்தும்,பா.ஜ.க. பொதுச் செயலாளர் அனந்த்குமாரை ஆதரித் தும் தீவிர பிரச்சாரம் செய்தார்.

கன்னட எழுத்தாளர் ராமா ஜோய்ஸ் பெங்களூரில் பா.ஜ.க. சார்பாக களமிறங்கியுள்ள 4 வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடைபெற்ற இலக்கிய வாதிகள் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

பிரபல கன்னட எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பா செவ்வாய்க்கிழமை பிரச்சாரத்தின் போது, ‘‘ராகுல் காந்தியை விட மோடியே பிரதமர் பதவிக்கு தகுதியானவர்.

டீ விற்கும் பையனாக வாழ்க்கையை ஆரம்பித்த மோடி மட்டுமே ஏழை மக்களுக்கு ஆதரவானவர்'' என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x