Last Updated : 22 May, 2015 03:38 PM

 

Published : 22 May 2015 03:38 PM
Last Updated : 22 May 2015 03:38 PM

ஓராண்டு காலத்தில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியுள்ளோம்: அருண் ஜேட்லி

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த ஓராண்டு ஊழலற்ற ஆட்சியை வழங்கியுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி கூறும்போது, “அரசின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் நாட்டிற்கு ஊழலற்ற ஒரு ஆட்சியை வழங்கி வருகிறோம். அரசியல் ஊழலிலிருந்து சாமானிய மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஓராண்டில் இதனை சாதித்துள்ளோம்.

ஓராண்டுக்கு முன்னதாக அவநம்பிக்கையான ஒரு சூழல் நிலவியது, பொதுவாகவே ஒரு வாட்டமும், சோர்வும் இருந்து வந்தது. இப்போது உற்சாகமான சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த ஆட்சியின் தீர்மான உறுதியினால் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை விரைவில் எட்டுவோம். நாம், சீர்திருத்தம் மற்றும் தாராளமய பொருளாதார காலக்கட்டத்தில் இருந்து வருகிறோம் ஆனால் முதலாளித்துவத்துக்கு நட்பு ரீதியாக அல்ல.

தெளிவற்ற பொருளாதாரக் கொள்கைகள்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. தற்போதைய அரசு வளர்ச்சியை கவனத்தில் கொண்ட அரசாகும்.

எங்களது சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இந்த நாட்டிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு வலுவாக அமையும். இதற்கான முடிவெடுப்பதில் உறுதி இருந்தால் நிச்சயம் வளர்ச்சியும், சமூகப் பாதுகாப்பும் நம் கைக்கெட்டும் தூரத்தில் மட்டுமே உள்ளது”

இவ்வாறு கூறினார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x