Published : 27 Jan 2015 04:34 PM
Last Updated : 27 Jan 2015 04:34 PM

ஒபாமா வருகையால் இரு நாட்டு நட்புறவில் புதிய சகாப்தம்: மோடி கருத்து

ஒபாமா வருகை, இந்தியா - அமெரிக்கா நட்புறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் தனது மனைவி மிஷெலுடன் சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், "Farewell @WhiteHouse! உங்கள் வருகை இந்தியா - அமெரிக்கா நட்புறவை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது. புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. தங்கள் பயணம் பாதுகாப்பானதாக அமைய வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெள்ளை மாளிகை ட்விட்டர் கணக்கில், "@NarendraModi நினைவில் நீங்காத ஒரு பயணத்தை உருவாக்கித் தந்ததற்கு நன்றி. இந்திய மக்களின் கனிவான வரவேற்பை மறக்க முடியாது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

குடியரசு தின விழாவில் கலந்து கொண்டபோது மழை காரணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா சிறிது நேரம் தானே குடையை பிடித்துவாறு நிற்க நேர்ந்தது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "படே படே தேஷோன் மே.... (Bade Bade Deshon Mein)" என குறிப்பிடப்பட்டிருந்தது. ஷாருக்கான் நடித்த தில் வாலே துல்ஹனியா லே ஜாயிங்கே என்ற திரைப்படத்தில் ஒரு பிரபல டயலாக் இது. (‘Bade Bade Deshon Mein Aisi Choti Choti Baatein Hoti Rehti Hai...’) அதாவது, மிகப் பெரிய நாட்டில்கூட இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் நடைபெறுகின்றன என்பது அதன் பொருளாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x