Published : 27 Jan 2015 03:50 PM
Last Updated : 27 Jan 2015 03:50 PM

ஒபாமா பேருரையில் பதியத்தக்க 10 கருத்துகள்

'இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்' (India and America: The Future We Can Build Together) என்ற தலைப்பில் டெல்லி டவுன் ஹாலில் அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

அவர் பேச்சில் இருந்து குறிப்பிடத்தக்க 10 கருத்துகள்:

1. ஒரு தேசத்தின் வெற்றியானது அத்தேசத்தின் பெண்கள் எட்டும் உயரத்தைப் பொருத்தே அமையும். ஒவ்வொரு மகளும், ஆண்மகனுக்கு சமமானவளே.

2. இழிவாகக் கருதப்படும் தொழிலைச் செய்பவர்கள் கனவுகளும் நாம் காணும் கனவுகளுக்கு நிகரானவையே. அதிர்ஷ்டவசமாக நாம் கனவு காண சுதந்திரம் உள்ள நாடுகளில் பிறந்திருக்கிறோம். அதன் காரணமாகவே, ஒரு சமையல்காரனின் பேரன் (நான்) அதிபராக முடிந்தது, ஒரு டீ விற்பவர் (மோடி) பிரதமராக முடிந்தது.

3. ஒரு தனிநபர் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பயமின்றி, பாகுபாடின்றி பின்பற்ற உரிமை இருக்கிறது. மத, இன, நிறப் பாகுபாடுகள் நம்மைப் பிரித்தாளாமால் தற்காத்துக் கொள்ள வேண்டும். மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும்.

4. தடுக்கக் கூடிய நோய்களால் நம் நாட்டு குழந்தைகள் பலியாகாமல் தடுக்க தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் இணைந்து செயல்பட வேண்டும்.

5. கடந்த சில ஆண்டுகளில் மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியா அதிகமான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.

6. செவ்வாய், சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய ஒரு சில நாடுகள் பட்டியலில் இந்தியாவும், அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளன.

7. அமெரிக்காவுக்கு இந்திய மாணவர்கள் வருவதைக் காட்டிலும், இந்தியாவில் கல்வி பயில அமெரிக்க மாணவர்கள் அதிகளவில் முன்வர வேண்டும் என விரும்புகிறேன்.

8. ஷாருக்கான், மேரிகோம், மில்கா சிங் இவர்கள் அனைவரது வெற்றிகளையும் இந்தியர்கள் சமமாகக் கொண்டாட வேண்டும். நிற, வழிபாட்டு முறைகளால் இவர்களது வெற்றிகளை பிரித்துப் பார்க்கக் கூடாது.

9. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.

10. நாம் அனைவரும் ஒரே தோட்டத்தில் மலர்ந்த அழகிய மலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x