Published : 28 Jun 2016 07:59 AM
Last Updated : 28 Jun 2016 07:59 AM

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா இணைந்தது: நவீன தொழில்நுட்பங்களைப் பெற வாய்ப்பு

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப் பாட்டு அமைப்பில் இந்தியா 35-வது உறுப்பினராக நேற்று முறைப்படி இணைந்தது. இதன் மூலம் உயர் தொழில்நுட்பங்க ளைப் பெறும் வாய்ப்பு இந்தியா வுக்குக் கிடைத்துள்ளது.

ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப் பாட்டு அமைப்பு (எம்டிசிஆர்), ஜி-7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றால் 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள், குறிப்பாக குறைந்தது 500 கிலோ எடையுடன் 300 கி.மீ. பறந்து சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 35- வது உறுப்பு நாடாக இந்த அமைப்பில் சேர இந்தியா ஏற்கெனவே விண்ணப் பித்திருந்தது. உரிய நடைமுறை களுக்குப் பிறகு நேற்று முறைப் படி இணைந்தது.

பிரான்ஸ், நெதர்லாந்து, லக்ஸம் பர்க் ஆகிய நாடுகளின் தூதர் கள் பங்கேற்ற இதுதொடர்பான நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது இந்தியா உறுப்பினராவதற்கான நடைமு றைகள் இறுதி செய்யப்பட்டு, கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து, நெதர்லாந் தின் தி ஹேக் நகரில் உள்ள எம்டி சிஆர் தலைமையகத்தில் இருந்து, இந்தியா உறுப்பினரானதை உறுதி செய்து அறிக்கை வெளியிடப்பட் டது. மேலும், “எம்டிசிஆர் அமைப் புக்கு இந்தியாவை வரவேற்கி றோம். சர்வதேச அளவில் நீண்ட தூர ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்களை ஏவும் கருவிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்து வதற்கான இந்த அமைப்பின் கரத்தை வலுப்படுத்துவதாக இந்தியாவின் சேர்க்கை அமையும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில், “இந்தியா எம்டிசிஆர்-இல் இணைந்துள்ளது. இது, அணு ஆயுத பரவல் தடையின் விதி முறைகளை நடைமுறைப்படுத் துவதற்கு பரஸ்பரம் சாதகமாக இருக்கும். இந்தியாவின் உறுப்பி னராகும் முயற்சிக்கு ஆதரவளித்த 34 நாடுகளுக்கும் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். குறிப்பாக பிரான்ஸ், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் தூதர்களுக்கு நன்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்கள்

எம்டிசிஆர் அமைப்பில் இந்தியா இணைந்திருப்பதன் மூலம், அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை வாங்க முடியும். மேலும், ரஷ்யாவுடனான கூட்டுச் செயல்பாடு மேலும் விரிவடையும்.

பனிப்போர் காலகட்டத்தில், இந்தியாவுக்கு கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வழங்க ரஷ்யா மறுத்து வந்தது. இனி விண்வெளி ஆய்வுகளுக்காக கிரையோஜெ னிக் இன்ஜின்களை மேம்படுத்தும் உயர் தொழில்நுட்பம் இஸ்ரோ வுக்கு கிடைக்கும்.

இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப் பில் உருவான பிரமோஸ் சூப்பர் சானிக் ரக ஏவுகணைகளை வியட்நாம் மற்றும் இதர நாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்ய முடியும். இதன்மூலம் குறிப்பிடத்தக்க ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியா உருவெடுக்கும்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் நீண்ட தூர ஏவுகணைகளை மேம் படுத்துவதற்காக, இஸ்ரேலிடம் இருந்து ஏரோ-2 ஏவுகணை பாது காப்பு (டிஎம்டி) தொழில் நுட்பத்தை இந்தியா வாங்க வேண்டி இருந் தது. ஆனால், எம்டிசிஆர் தடை காரணமாக இஸ்ரேல் வழங்காமல் இருந்தது. தற்போது இந்தியாவும் எம்டிசிஆர்-இல் உறுப்பினராகி உள்ளதால் ஏரோ-2 தொழில் நுட்பத்தை இந்தியா வாங்கி, பாகிஸ் தான் அல்லது சீனாவின் நீண்ட தூர ஏவுகணைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

தவிர, அமெரிக்கன் பிரிடேட்டர் போன்ற ஆளில்லா உளவு விமா னங்களை இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து வாங்க முடியும்.

தடைகளுக்குப் பிறகு

நீண்ட தூர ஏவுகணைகள் பரவலைத் தடுப்பதற்கான தி ஹேக் நன்னடத்தை விதிகளில் இணை வதற்கு இந்தியா இம்மாத தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து, எம்டிசிஆர் அமைப்பில் இணையும் முயற் சிகள் ஊக்கம்பெற்றன.

எம்டிசிஆர் அமைப்பில் இணை யும் இந்தியாவின் முயற்சி களை கடந்த 2015-ல் இத்தாலி தடுத்தது. மீனவர் கொலை வழக் கில் இத்தாலி கடற்படை வீரர்கள் நாடு திரும்ப இந்தியா அனுமதி மறுத்ததை மனதில் கொண்டு இத்தாலி செயல்பட்டதாக கருதப் பட்டது. இதனிடையே, 2-வது கடற்படை வீரரான சல்வடோர் இத்தாலி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்தே, இத்தாலி தனது எதிர்ப்பைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

சீனா இல்லை

கடந்த 2008-ம் ஆண்டு அமெ ரிக்காவுடன் ஆக்கப்பூர்வ அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதன்மூலம் குறிப்பிட்ட அளவு அணுசக்தி மூலப்பொருட்கள், தொழில்நுட்பங் களை இந்தியா பெறுவதற்கு வகை செய்யப்பட்டது.

அதன்பின், அணுசக்தி, வழக்க மான ஆயுதங்கள், உயிரி ஆயு தங்கள், ரசாயன ஆயு தங்கள் ஒழுங்குமுறை தொழில் நுட்பங்கள் தொடர்பான பல்வேறு உயர் அமைப்புகளில் உறுப்பினரா வதற்கு இந்தியா முயற்சி செய்தது. கடந்த வாரம் அணுசக்தி விநியோக குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. நடைமுறை விதிகளைக் காரணம் காட்டி, இந்தியா அதில் உறுப்பி னராக இணையாமல் பார்த்துக் கொண்டது.

என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப் பினராக சேரும் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் எம்டிசிஆர் அமைப்பில் இந்தியா இணைந்துள்ளது.

இந்த அமைப்பில் சீனா உறுப்பி னராக இல்லை. இது தொ டர்பான சீனாவின் விண்ணப்பம் நிலுவை யில் உள்ளது. இதனைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்தி என்எஸ்ஜியில் நுழைவதற்கு இந்தியா முயற்சி செய்யும் என நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x