Last Updated : 19 Feb, 2017 01:48 PM

 

Published : 19 Feb 2017 01:48 PM
Last Updated : 19 Feb 2017 01:48 PM

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3-வது கட்ட தேர்தல்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரூக்காபாத், கான்பூர், பாரபங்கி உள்ளிட்ட 12 மாவட்டங் களுக்குட்பட்ட 69 தொகுதிகளில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மத்திய உள்துறை அமைச் சரின் லக்னோ மக்களவை தொகுதி, சமாஜ்வாதி கட்சியின் செல்வாக்கு மிகுந்த கன்னோஜ், மெயின்புரி, எடவா ஆகியவை இன்று தேர்தல் நடைபெறும் பகுதி களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்தத் தொகுதிகளில் மொத்தம் 826 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.1 கோடி பெண்கள், 1,026 திருநங்கைகள் உட்பட 2.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக எடவா தொகுதியில் 21 பேரும் குறைந்தபட்சமாக ஹைதர்கர் தொகுதியில் 3 பேரும் போட்டியிடுகின்றனர். 25,603 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2012-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 69 தொகுதிகளில், சமாஜ்வாதி 55-லும், பகுஜன் சமாஜ் 6-லும், பாஜக 5-லும், காங்கிரஸ் 2-லும் சுயேச்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

சமாஜ்வாதி மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் மகன் நிதின் அகர்வால், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பாஜகவில் ஐக்கியமான பிரிஜேஷ் பதக், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ரீட்டா பகுகுணா ஜோஷி, முலாயம் சிங் மருமகள் அபர்னா யாதவ், சமாஜ்வாதி மூத்த தலைவர் சிவ்பால் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் பி.எல்.பூனியா மகன் தனுஜ் பூனியா ஆகியோர் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x