Last Updated : 23 Jan, 2017 10:26 AM

 

Published : 23 Jan 2017 10:26 AM
Last Updated : 23 Jan 2017 10:26 AM

உத்தரப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல்: சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு

உத்தரப்பிரதேச தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் முதல்வராக அகிலேஷ் பதவி வகிக்கிறார். கட்சி நிறுவனரும் தந்தையுமான முலாயம் சிங், சித்தப்பா சிவ்பால் யாதவ் ஆகியோருடன் பகிரங்கமாக மோதிய அகிலேஷ், கட்சி சின்னத்தை கைப்பற்றினார். இதையடுத்து அகிலேஷின் போக்குக்கு முலாயம் விட்டுவிட்டார். இந்நிலையில், பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை உ.பி.யில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கி ரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதி களில், சமாஜ்வாதி கட்சி 298 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 105 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இதுபற்றிய அறிவிப்பை நேற்று நடந்த பத்திரிகையாளர் கள் சந்திப்பில் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் நரேஷ் உத்தம், காங்கிரஸ் மாநில தலைவர் ராஜ் பப்பர் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா வதேராவும், அகிலேஷ் யாதவும் நேற்று தொலைபேசியில் பேசி முடிவெடுத்துள்ளனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், 100 தொகுதிதான் தர முடியும் என்று அகிலேஷ் பிடிவாதமாக இருந்தார். இதனால் கடந்த சில நாட்களாக கூட்டணி இழுபறியில் இருந் தது. இந்நிலையில், 105 தொகுதி களில் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சியும் நேற்று உறுதி செய்தது.

சமாஜ்வாதி தேர்தல் அறிக்கை

இதற்கிடையில் வேட்பாளர் கள் பட்டியலை சில நாட் களுக்கு முன்னர் அகிலேஷ் வெளியிட்டார். இந்நிலையில், 32 பக்க சமாஜ்வாதி தேர்தல் அறிக்கையை நேற்று லக்னோ வில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சி யில் முலாயம், சிவ்பால் ஆகி யோர் பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கான், முலாயமின் வீட்டுக்குச் சென்று தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர முயற்சித்தார். எனினும் நிகழ்ச் சிக்கு வர முலாயம் மறுத்து விட்டார்.

தேர்தல் அறிக்கையில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கிராமங்களுக்கு 24 மணி நேர மின்சாரம், லேப் டாப்கள் விநி யோகம், கன்யா வித்யா தானம், சமாஜ்வாதி ஓய்வூதியம், பூர் வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடம், ஜானேஸ்வர் மிஸ்ரா மாடல் கிராமங்கள் உருவாக்கம், போலீஸ் மற்றும் பெண்களுக்கு ‘ஹெல்ப்லைன்’களை மேம் படுத்துவது உட்பட பல திட்டங் களை தேர்தல் அறிக்கையில் அகிலேஷ் கூறியுள்ளார். விவ சாயிகள் விதைகள், உரங்கள் வாங்க சமாஜ்வாதி கிஷான் கோஷ் என்ற சிறப்பு திட்டம் அறிக் கையில் இடம்பெற்றுள்ளது.

மேலும், ‘காம் போல்தா ஹை’ (செய்த பணிகள் பேசுகி றது) என்ற கோஷத்தை அறிவித்தார். உ.பி.யில் கடந்த 5 ஆண்டுகளில் தனது தலைமையில் சமாஜ்வாதி அரசு செய்துள்ள பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும்படி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அகிலேஷ் கேட்டுக் கொண்டார். அகிலேஷ் மேலும் கூறும்போது, ‘‘கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றி இருக்கிறோம். நீங்கள் 5 ஆண்டு கள் பணியாற்றினால், மீண்டும் 5 ஆண்டு அரசு அதிகாரத்தை பெற முடியும். அதை செய்திருக் கிறோம். இந்த தேர்தலில் 403 இடங்களில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்’’ என்றார்.

அவர்களிடம் சென்றால், துடைப்பம் கொடுப்பார்கள் அல்லது யோகா செய்ய சொல்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மீது அகிலேஷ் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x