Published : 06 May 2016 08:31 AM
Last Updated : 06 May 2016 08:31 AM

இறுதிக்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: மேற்குவங்கத்தில் 84% வாக்குப்பதிவு

மேற்குவங்கத்தில் இறுதிக்கட்டமாக 25 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேற்குவங்க சட்டப்பேரவையில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. அந்தத் தொகுதிகளுக்கு 6 கட்டங் களாக தேர்தல் நடைபெற்றது. இறுதிக்கட்டமாக கூச்பெஹர், கிழக்கு மிதினாபூர் மாவட்டங்களைச் சேர்ந்த 25 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

இரு மாவட்டங்களிலும் 58 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ள னர். அவர்களுக்காக 6,774 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. இறுதிக்கட்டத் தேர்தல் என்பதால் 50 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். கடந்த தேர்தல்களின் போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் நேற்று வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருந்தது.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. திரிணமூல், பாஜக ஆகியவை 25 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி யில் இடதுசாரி கட்சிகள் 18 தொகுதி யிலும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதர தொகுதி களில் 3 சுயேச்சை வேட்பாளர்களை இடதுசாரி கட்சிகள் ஆதரிக் கின்றன.

ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தில் 18 பெண்கள் உட்பட 170 வேட்பாளர்கள் உள்ளனர். அவர் களில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் மூத்த தலைவர் சுவந்து அதிகாரி, அமைச்சர் சுதர்சன் கோஷ் மற்றும் பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் பர்வேஷ் சந்திர அதிகாரி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது. பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதி யாக நடைபெற்றது. மொய்னா தொகுதி கோப்ரா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராம் நகர் தொகுதியில் சங்கர்பூர் பகுதியில் மார்க்சிஸ்ட் தொண் டரின் வீடு மர்ம நபர்களால் சேதப் படுத்தப்பட்டது. கிழக்கு மிதினாபூர் மாவட்டத்தில் தாம்லுக் பகுதியில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தாக்கி யதில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர்.

ஏற்கெனவே நடந்த 6 கட்ட தேர்தல்களிலும் சராசரியாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் கடைசி கட்டத் தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x