Last Updated : 04 Oct, 2015 05:20 PM

 

Published : 04 Oct 2015 05:20 PM
Last Updated : 04 Oct 2015 05:20 PM

அபாய கட்டத்தை தாண்டினார் இந்திராணி முகர்ஜி: மும்பை மருத்துவமனை டாக்டர்கள் தகவல்

அதிக மாத்திரைகளை உட் கொண்டு தற்கொலைக்கு முயன்ற தாக கூறப்படும் இந்திராணி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மும்பை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இளம்பெண் ஷீனாபோரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணி கைது செய்யப்பட்டு மும்பை பைகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 3-ம் தேதி அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு விதித்திருந்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியிருப்பதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

இதுகுறித்து ஜே.ஜே. அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் டி.பி.லகானே நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்திராணி அபாயகட்டத்தை தாண்டிவிட்டார். அவருக்கு தற்போது நினைவு திரும்பி யுள்ளது. ஏதாவது சொன்னால் புரிந்துகொள்கிறார். தண்ணீர் குடிக்கிறார். அவர் உடல்நிலை சற்று தேறியுள்ளது. எனினும் அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திராணியின் சிறுநீர் மாதிரி கள் இந்துஜா மருத்துவமனை ஆய்வகம் மற்றும் எப்.எஸ்.எல். என்ற ஆய்வகத்துக்கு அனுப்பப் பட்டன. வழக்கமாக ஜே.ஜே. மருத்துவமனையில் இருந்து இந்துஜா மருத்துவமனைக்கு ஆய்வக பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும். ஆனால் இந்திராணி விவகாரம் நீதிமன்றம் சார்ந்தது என்பதால் வேறொரு தனியார் ஆய்வகத்துக்கும் சிறுநீர் மாதிரி அனுப்பப்பட்டது.

இதில் இந்துஜா மருத்துவ மனை ஆய்வகம் அனுப்பியுள்ள அறிக்கையில், இந்திராணி அள வுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டிருப்பதாக கூறப்பட் டுள்ளது.

ஆனால் எப்.எஸ்.எல். ஆய் வகம் அனுப்பியுள்ள அறிக்கை யில், அளவுக்கு அதிகமாக மாத்திரை உட்கொண்டதாக தெரிய வில்லை என்று குறிப்பிடப்பட் டுள்ளது.

இரு ஆய்வகங்களின் அறிக்கை களும் நேரெதிராக உள்ளன. இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியபோது, எப்.எஸ்.எல். ஆய்வகம் பழைய முறைப்படி ஆய்வு நடத்தியிருக்கக் கூடும். அதனால் துல்லியமான அறிக்கையை அவர்களால் அளிக்க முடியவில்லை. எனினும் இந்துஜா மருத்துவமனை ஆய்வகத்திடம் மீண்டும் மருத்துவ அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தன.

இந்திராணிக்கு வலிப்பு நோய் தடுப்பு மாத்திரை, மன அழுத்தம் ஆகிய பிரச்சினைகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அவர் வலிப்பு நோய் மாத்திரைகளை சாப்பிட வில்லை. மனஅழுத்தத்துக்கான மாத்திரைகளையே அதிகம் உட்கொண்டிருக்கிறார் என்று இந்துஜா ஆய்வக அறிக்கையை சுட்டிக்காட்டி ஜே.ஜே. மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x