Last Updated : 30 Mar, 2017 11:48 AM

 

Published : 30 Mar 2017 11:48 AM
Last Updated : 30 Mar 2017 11:48 AM

ஆர்.கே.நகரில் 12 அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை

இடைத்தேர்தலை சந்திக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 12 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு போட்டியிடும் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக, அங்கு தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் நேற்று (புதன்கிழமை) புகார் அளித்துள்ளது.

திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவாஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் இப்புகாரை அளித்தனர். இப்புகார் மனுவில், பெரம்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் உத்தரவின்பேரில் தமிழக அரசின் 9 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 3 வருவாய்துறை அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்படுவதாகவும் அவர்களை உடனடியாக ஆர்.கே.நகரில் இருந்து மாற்றும்படியும் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, "சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டாலும் அவரால் அங்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சசிகலா அணிக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதை ஆதாரங்களுடன் கூறியுள்ளோம். ஆர்.கே.நகர் தொகுதியை சுற்றி சிறிது தொலைவில் அமைந்துள்ள 13 திருமண மண்டபங்களில் பணம் பட்டுவாடா செய்ய இவர்கள் உதவுகின்றனர். உடுமலைராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியஇருஅமைச்சர்களும் பணம் பட்டுவாடாசெய்வதை நேரடியாகக் கண்டுபிடித்துஆதாரங்களுடன் அளித்த புகார்களை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். சசிகலா அணிக்கு சாதகமாக செயல்படும்அதிகாரிகள் மாற்றப்பட்டால் தான் தேர்தல்நியாயமாக நடைபெறும். ஓபிஎஸ் அணிஎன்ன செய்கிறார்கள் எனத்தெரியவில்லை" என்றார்.

சில தினங்களுக்கு முன் திமுக அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டார். இதற்காக ஆணையத்திடம் நன்றி தெரிவித்த திமுக தற்போது மேலும் சிலரை மாற்றும்படி வேண்டியுள்ளது.

திமுக அளித்துள்ள பட்டியலில் காவல்துறை தரப்பில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஜெயக்குமார், உதவி ஆணையர் அனந்தகுமார், திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், ஆர்.கே.நகர் காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் எச் 6-ன் வீரக்குமார், எச் 4-ன் அமுல் ஆனந்த்ஸ்டான்லி, எச் 5-ன் ரமேஷ் பாபு, எச் 3-ன்பாலகிருஷ்ணபிரபு, என் 2-ன் ஆபிரஹாம்குருஸ், என் 4-ன் சரவணபிரபு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதிகாரிகள் தரப்பில் தண்டையார் பேட்டை மாநகராட்சி பிராந்திய அதிகாரி விஜயகுமார், துணை வட்டாட்சியர் சேகர், உதவி வட்டாட்சியர் மதன் பிரபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x