Last Updated : 22 Dec, 2014 04:39 PM

 

Published : 22 Dec 2014 04:39 PM
Last Updated : 22 Dec 2014 04:39 PM

ஆட்டோகிராஃபுக்கு விடை கொடுத்துவிட்ட செல்ஃபி மோகம்

நகர கலாச்சாரத்தில் செல்ஃபி பழக்கம் மிக அதிகமாக பரவி வருவதன் காரணமாக ஆட்டோகிராஃப் வாங்கும் வழக்கம் குறைந்து கொண்டு வருவதையும் அவை பழமையான ஒன்றாக மாறிவிட்டதையும் பார்க்க முடிகிறது.

செல்ஃபோனில் செல்ஃபி எடுக்கும் பழக்கம் 2014- ஆம் ஆண்டில் உலகமெங்கும் மிக வேகத்தில் பரவியது, அதன் தாக்கம் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் மிகப் பெரிய நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்ஃபோன் மூலம் 'சுயப்படம்' எடுக்கும் முறை தற்போது நகரப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் பிரபலங்களுடனான சந்திப்பு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது என்பது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் செல்ஃபி வெளியிடுவதோடு முடிந்துவிடுகிறது. இதன் கோப்புக்கள் எந்த அளவுக்கு பாதுகாக்கப்படும்? என்பது மற்றொரு கேள்வி.

பிரபலங்கள் மற்றும் நாம் ரசிக்கும் நபர்களை சந்திக்கும் போது அந்த நிகழ்வின் பதிவாக அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி கொள்வது இயல்பான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த பழக்கம் முற்றிலுமாக குறைந்து வருவதை பார்க்க முடிகிறது.

உதாரணமாக பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் அவர் நடித்து வெளியான 'ஹேப்பி நியூ இயர்' திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கான விழாவுக்காக கொல்கத்தா கல்லூரிக்கு சென்றபோது, அவரிடம் ஆட்டோகிராஃப் பெறுவதற்காக ஒருவர் கூட வரவில்லை, மாறாக அனைவரும் அவருடன் செல்ஃபி எடுக்க குவிந்து அவரது முகத்தின் முன்பு செல்ஃபோனை நீட்டினார்கள் என்ற செய்தியே செல்ஃபி தாக்கத்தின் அளவை வெளிப்படுத்துவதாக உள்ளது.

செல்ஃபி யுகத்தால் ஆட்டோகிராஃப் பழக்கம் அழிந்து வருவதை உணர்ந்து அதனை முதன்முதலாக வருத்தத்துடன் வெளிப்படுத்தியவர் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன்.

ஒரு நாள் காலை நேர நடைப்பயிற்சிக்கு சென்று வீடு திரும்பிய இடைவெளியில், தன்னுடன் 5 பேர் செல்ஃபி எடுத்துச் சென்றதை குறிப்பிட்டு, ஆட்டோகிராஃப் பழக்கம் நிறைவுக்கு வந்ததாக ஷேன் வார்ன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கடந்த மே மாதம் தெரிவித்தார்.

இந்த உணர்வு அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பிறக் கலைஞர்கள், ஏன் போப் ஆண்டவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

நமது நாட்டில் குறிப்பாக 16-வது மக்களவைத் தேர்தல் சமயத்தில் செல்ஃபியின் தாக்கம் அரசியல் வட்டாரத்தில் வெளிப்பட்டது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும், அதன் பின்னர் முதல் சந்திப்பாக அவர் தனது தாயை சென்று சந்தித்து அவரோடு எடுத்த செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டார். உடனே அந்த படம் பலரால் ரீ-ட்வீட் செய்யப்பட்டு வைரலாக மாறியதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிந்தது.

விரைவில் வளர்ந்து வரும் க்ரூஃபி பழக்கம் கேமரா பயன்பாட்டுக்கும் புகைப்படம் எடுக்கும் பழக்கத்துக்கும் முடிவை கொண்டுவர வாய்ப்பு உருவாகலாம்.

தமிழில்: பத்ம ப்ரியா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x