Published : 19 Feb 2017 12:22 PM
Last Updated : 19 Feb 2017 12:22 PM

அயோத்தியில் ராமர் கோயில்: அமைச்சர் உறுதி

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ராமர் கோயிலை வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் கட்ட முடியுமா என்பதற்கு அகிலேஷும் ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் ஏழை பெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப் படுகின்றன. இதுதான் நல்லாட்சி. இது பிரியங்கா காந்திக்கு புரியாது.

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இந்துக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். அவருக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x