Published : 06 Jun 2014 03:56 PM
Last Updated : 06 Jun 2014 03:56 PM

நாடாளுமன்ற கூட்டங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

நாடாளுமன்ற கூட்டங்களின்போது ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுமாறு பாஜக எம்பிக்க ளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

மக்களவை தேர்தலுக்குப் பிறகு கடந்த மே 20-ல் நடைபெற்ற பாஜக எம்பிக்களின் முதல் கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு பாஜக எம்பிக்களின் இரண்டாவது கூட்டம் நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வெளி யாட்கள் மற்றும் செய்தியாளர் களுக்கு அனுமதி இல்லை. எனவே, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள், கூட்டம் முடிந்த பிறகு மோடியின் பேச்சு குறித்து நட்புடன் பகிர்ந்து கொண்டனர்.

இதுவரையில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றபோது சில எம்பிக்கள் முறையாக அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததையும், தங்களுடைய தொகுதி பிரச்சினை தொடர்பான விவாதங்களில் கலந்து கொள்ளாமல் விலகி இருந்ததையும் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

இது பொதுமக்களிடையே தவறான செய்திகளைக் கொண்டு செல்லும் எனவும், இந்தமுறை பாஜக எம்பிக்கள் அப்படி இல்லாமல் அவையின் மதிப்பை உணர்ந்து, இதுபோன்ற கூட்டங் களில் ஆக்கப்பூர்வமான முறை யில் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதற்காக, அவையில் நடை பெற உள்ள விவாதங்களில் கலந்து கொண்டு பேச, சிறந்தமுறையில் தங்களை தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும் எனவும் மோடி கேட்டுக் கொண்டார். சுமார் இருபது நிமிடங்கள் நீடித்த இந்த உரையில், அரசின் நலத்திட்டங் களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதிலும், புதிய யோசனை களை மக்களிடமிருந்து அரசுக்கு பெற்றுத்தருவதிலும் முக்கியத்து வம் அளிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

இதற்கு முன்பு மத்திய அமைச் சர்கள் கூட்டத்தில் அவர்களுக்கு அளித்த ஆலோசனையைப் போல, மக்களைத் தொடர்பு கொள்ள பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களை அதிக அளவில் பயன்படுத்தும்படியும் யோசனை கூறினார்.

முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளும் எம்பிக்கள் மூலமாக ஊடகங்களுக்கு கசியும் செய்திகள் குறித்து குறிப்பிட்ட மோடி, செய்தியாளர்களிடம் கவனமாகப் பேசும்படியும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் மத்திய உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் புதிய எம்பிக்களை வரவேற்று பேசினார் கள். பாஜகவின் 282 எம்பிக்கள் கலந்து கொண்ட கூட்டத்தினர் முன்பாக, பிரதமர் மோடியுடன், அத்வானி, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகி யோர் அமர்ந்திருந்தனர்.

எதிர்ப்புறம் அமர்ந்திருந்த எம்பிக்களின் முதல் வரிசையில் மத்திய வெளியுறத்துறை அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜ், தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

காலில் விழவேண்டாம்

உறுப்பினர்கள் மூத்த தலைவர்களைப் பார்க்கும்போது அவர்களின் பாதங்களைத் தொட்டும், காலில் விழுந்தும் வணங்குவதை தவிர்க்க வேண்டும். இரு கரங்களை கூப்பி வணங்கினால் போதுமானது எனவும் மோடி அறிவுரை வழங்கினார் என எம்பிக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x