Last Updated : 12 Jul, 2018 03:54 PM

 

Published : 12 Jul 2018 03:54 PM
Last Updated : 12 Jul 2018 03:54 PM

பெங்களூருவில் 330 பயணிகள் உயிர்பிழைத்த சம்பவம்; நடுவானில் எதிரெதிரே நெருங்கிப் பறந்த விமானங்கள்

பெங்களூருவில் நடுவானில் 330 பயணிகளுடன் சென்ற இரு இண்டிகோ விமானங்கள் ஒரு குறுகலான இடைவெளியில் நெருங்கிப் பறந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தில் கோவையிலிருந்து ஹைதராபாத் விமானத்தில் 162 பயணிகளும் பெங்களூருவிலிருந்து கொச்சிக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் 166 பயணிகளும் இருந்தனர்.

எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும் வானில் மிக நெருக்கமாக எதிரெதிரெ மோதிக்கொள்வதுபோல வந்தன. நல்லவேளையாக மோதிக்கொள்ளாமல் சற்றே விலகின. அதற்குக் காரணம் இதற்கென உள்ள தொழில்நுட்பப் பிரிவான போக்குவரத்து மோதல் தவிர்ப்பு அமைப்பின் எச்சரிக்கை அலாரம்தான்.அதனாலேயே நடுவானில் நிகழ இருந்த மோதல் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளரும் இச்சம்பவத்தை உறுதிபடுத்தினார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

இந்த இரண்டு விமானங்களுக்கிடையே 200 அடி இடைவெளி இருந்தது உண்மைதான். சற்று பிசகியிருந்தாலும் விமானங்கள் மோதியிருக்கும். ஜூலை 10ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதில் எங்கள் தவறு ஏதுமில்லை என்பதைக் கூறியுள்ளோம்.

வான்வழிப் போக்குவரத்து விபத்துத் தவிர்ப்பு அமைப்பான தீர்வு ஆலோசனை அமைப்பின் வழிகாட்டல்படியே கோவையிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிலிருந்து கொச்சின் தடங்களில் எங்கள் இரு விமானங்களும் சரியான நேரங்களில் இயக்கப்பட்டன.

வழக்கமாக கடைபிடிக்கப்படும் தொழில்நுட்ப நடைமுறையைத் தொடர்ந்து விமானம் புறப்படுவது குறித்து ரெகுலேட்டருக்கும் தகவல் தரப்பட்டது. அதன்பிறகே விமானம் இயக்கப்பட்டது. ஆனால் வானில் இரு விமானங்களும் மோதல் ஏற்படும் நிலைக்கு நெருங்கி பறந்தததற்கான காரணம் புரியவில்லை'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x