Last Updated : 12 Jul, 2018 01:37 PM

 

Published : 12 Jul 2018 01:37 PM
Last Updated : 12 Jul 2018 01:37 PM

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறை: காவல்நிலையத்தில் பாதிரியார் சரண்

கேரளாவில், பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதிரியார்களில் ஒருவர் இன்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

மலங்காரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் பாதிரியார்கள் மூவரில் ஒருவர் மட்டும் இவ்வழக்கில் சரணடைந்துள்ளார்.

பாதர் ஜோப் மேத்யூ, இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்டவர், குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இன்று சரணடைந்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பாதிரியார்கள் மூவரும், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், பெண்ணை மிக மோசமாக நடத்தியுள்ளதை பார்க்கமுடிகிறது என்பதால் இவர்களுக்கு முன்ஜாமீன் தர இயலாது என்று கேரளா உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக நேற்று மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஜாமீன் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இன்று ஒரு பாதிரியார் போலீஸிடம் சரணடைந்துள்ளார்.

கேரள போலீசின் குற்றவியல் பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பாதிரியார்களில் நான்கு பேருக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளைச் சுமத்திய உடனேயே பாதிரியார்கள், ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜியார்ஜ் நீதிமன்றத்தை அணுகினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெற்றப்பட்ட பிறகு இந்த பாதிரியார்களுக்கு எதிராக குற்றவியல் பிரிவால் எப்ஐஆர் வழக்கு பதியப்பட்டது.

கடந்த மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஐந்து பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தினார். இவரது மனைவியிடம் பாதிரியார்கள் நடந்துகொண்டது பற்றி உயரதிகாரிகள் பேசும் நம்பகமான உரையாடல் அடங்கிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x