Published : 12 Jul 2018 09:11 AM
Last Updated : 12 Jul 2018 09:11 AM

ஆந்திராவில் 60 இடங்களில் அண்ணா கேன்டீன்கள்: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

விஜயவாடா

தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகத்தை போன்று ஆந்திர மாநிலத்தில் 60 இடங்களில் அண்ணா கேன்டீன்களை  முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை மாநிலம் முழுவதும் தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த அமோக ஆதரவை தொடர்ந்து ஆந்திராவிலும் இத்திட்டத்தை செயல்படுத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார்.  இதையடுத்து சில இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த உணவகங்கள் தொடங்கப்பட்டன.

மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவை மக்கள் அன்புடன் ‘அண்ணா’ என்று அழைப்பதால் இந்த உணவகத்துக்கு அண்ணா கேன்டீன் என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் முதற்கட்டமாக 60 இடங்களில் நேற்று அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்பட்டன. இதில் விஜயவாடா நகரின் பவானிபுரத்தில் உள்ள அண்ணா கேன்டீனை  முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து, அங்கேயே உணவு சாப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஆந்திர மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 203 அண்ணா கேன்டீன்கள் திறக்கப்படும். அட்சய பாத்ரா எனும்

தனியார் நிறுவனத்திடம் கேன்டீன்பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. காலையில் ரூ.5-க்கு சிற்றுண்டியும், மதியம் ரூ.5-க்கு சாப்பாடும், இரவு ரூ.5-க்கு சிற்

றுண்டியும் வழங்கப்படும். அதாவது ரூ.73 வரை செலவாகும் உணவை ரூ.15-க்கே ஆந்திர அரசு மக்களுக்கு வழங்குகிறது. எவ்வளவு நிதிப் பற்றாக்குறை வந்தாலும் இத்திட்டத்தை அரசு நிறுத்தாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x