Last Updated : 11 Jul, 2018 05:47 PM

 

Published : 11 Jul 2018 05:47 PM
Last Updated : 11 Jul 2018 05:47 PM

என்னை மிரட்டுவதற்காகவே வருமான வரி சோதனை: மோடி மீது யோகேந்திர யாதவ் காட்டம்

என்னை மிரட்டும் நோக்கிலேயே ரிவாரியில் உள்ள என் சகோதரி மருத்துவமனையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது என்று ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் யோகேந்திர யாதவ். தற்போது ஸ்வராஜ் இந்தியா என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். இவர் தான் தொடர்ந்து ஹரியாணாவில் விவசாயிகளின் உற்பத்திப் பயிர்களுக்கு ஆதார விலை கோரியும் மதுக்கடைகளை மூடக்கோரியும் போராடியதால் என்னை மிரட்டவும் அமைதிப்படுத்தவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

யாதவ் இரண்டு நாட்களுக்கு முன் பாத யாத்திரையை தொடங்கியிருந்தார். மோடி அரசாங்கம் அவரது குடும்பத்தின்மீது குறிவைத்துள்ளதாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அவரது ட்விட்டர் பதிவு:

’’மோடி அரசாங்கம் தற்போது என் குடும்பத்தை குறிவைத்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும்படியும் மதுக்கடைகளை மூடும்படியும் கோரிக்கைகளை முன்வைத்து ஹரியாணாவில் பாத யாத்திரை மேற்கொண்டேன். கிட்டத்தட்ட 9 நாட்களாக நடைபெற்ற எனது பாத யாத்திரை பயணம் நேற்று முன்தினம் முடிவைடைந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு ட்விட்டர் பதிவில், ’’தயவு செய்து என்னை என்வீட்டில் தேடுங்கள். எதற்காக என் குடும்பத்தைச் சார்ந்தவர்களை குறிவைக்கிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஒரு ட்விட்டர் பதிவில், ‘’என்னை மிரட்டுவதற்காகவே இந்த வருமான வரித்துறை சோதனைகள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

''இன்று காலை 11 மணிக்கு எங்கள் குடும்பத்தினரின் மருத்துவமனைகளில் டெல்லியிலிருந்து 100 ப்ளஸ் காவல்படைகள் வருமான வரித்துறை சோதனைக்காக சூழ்ந்துள்ளன. எனது சகோதரிகள், சகோதரிகளின் கணவர்கள் மற்றும் அனைத்து மருமகன் மருமகள்கள் உள்ளிட்ட டாக்டர்கள் பலரையும் அவர்களது அறையிலேயே சென்று கைது செய்துள்ளனர். பெண்களுக்கான சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த ஐசியூ பிரிவில் பிரசவம் ஆனநிலையில் மருத்துவமனைக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது. என்னை மிரட்டுவதற்காகவே இந்த வருமான வரி சோதனை. மோடிஜி! என்னை நீங்கள் என்னை அமைதிப்படுத்தி அடக்க முடியாது.''

இவ்வாறு யோகேந்திர யாதவ் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x