Last Updated : 11 Jul, 2018 03:56 PM

 

Published : 11 Jul 2018 03:56 PM
Last Updated : 11 Jul 2018 03:56 PM

கிராமங்களில் உலவிக்கொண்டிருந்த ஆட்கொல்லி சிறுத்தை சுட்டுக்கொலை: காட்டின் அருகே பலரையும் கொன்றிருக்கக்கூடும் என அச்சம்

உத்தரகாண்ட் மாநிலம் ராஜாஜி புலிகள் காப்புக் காட்டைவிட்டு வெளியே வந்து கிராமங்களில் உலவிக்கொண்டிருந்த ஆட்கொல்லி சிறுத்தை ஒன்று இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்ட்டது. இச்சிறுத்தை மனிதனைக் கொன்று தின்னக்கூடியது.

இதுகுறித்து ராஜாஜி புலிகள் காப்புக் காட்டின் உயரதிகாரி சனாட்டன் சொங்கர் தெரிவித்ததாவது:

இந்த பெண் சிறுத்தைக்கு வயது 6லிருந்து 7 க்குள்தான் ஆகிறது. புள்ளி புள்ளியாய் இருந்த அந்த சிறுத்தை இன்று அதிகாலை 3.30 மணியளவில் சற்றே கால் தாங்கியவாறு கான்ட் கிராமத்தின் அருகே நடந்துவந்துகொண்டிருந்தது. ஊருக்குள் சிறுத்தையைக் கண்ட கிராம மக்கள் எல்லாரும் டெஹ்ரி அணைக்கட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு சென்று பாதுகாப்பாக தங்கியிருந்தனர்.

கொல்லப்பட்ட சிறுத்தையைப் பரிசோதித்துப் பார்த்ததில் அதன் வலது கால் காயமடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. காட்டில் இரையைத் தேடி அலைந்து திரிந்து, பசியைப் போக்கிக்கொள்ள இயலாத நிலைகூட அதன் கால் பலவீனத்திற்குக் காரணமாக இருக்கலாம். அதனாலேயே அது மனிதனைத் தேடி கிராமத்திற்குள் நுழைந்துள்ளது.

காட்டுக்கு அருகிலுள்ள கிராமங்களில் சிலரை இச்சிறுத்தை கொன்று தின்றிருக்கலாம் என்று சந்தேகிக்க பலமான இடம் உள்ளது.

வனவிலங்குகள் காவலர் டிவிஎஸ் காத்தி அனுப்பிய கடிதத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஆட்கொல்லி சிறுத்தையைக் கொல்வதற்கான ஆணை வழங்கப்பட்டிருந்தது. டேராடூனைச் சேர்ந்த பிரசாந்த் சிங் என்பருக்கு இச்சிறுத்தையைக் கொல்லும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

இவ்வாறு காப்புக் காட்டின் உயரதிகாரி சொங்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x