Published : 21 Jun 2018 04:29 PM
Last Updated : 21 Jun 2018 04:29 PM

எப்போது உங்கள் மரணம்? - கண்டுபிடித்துச் சொல்லும் கூகுள்

 ஒருவரின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து அளிக்கும் போது, அவருக்கு எப்போது மரணம் நிகழும் என 95 சதவீதம் துல்லியமாக கூகுள் கண்டுபிடித்துக் கூறுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நவீன, அவசரமான வாழ்க்கை முறையில் மனித உயிர்கள்  பிறக்கும் முறை அனைவருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. மரணம், அது எப்போது சம்பவிக்கும், எந்த நேரத்தில், தேதியில் என்பதுதான் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட முடியாத விஷயமாக இருக்கிறது.

வாழ்க்கையின் சூட்சமம் அந்த ஒரு விஷயத்தில்தான் அடங்கி இருக்கிறது. சாகும் தேதி தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் என்று கூறுவார்கள். அது விரைவில் கூகுள் தொழில்நுட்பத்தால், நனவாகப் போகிறது.

கூகுள் நிறுவனத்தின் மெடிக்கல் பிரைன் டீம் ஒருங்கிணை ஆர்ட்டிபிஷயல் இன்டலிஜன்ஸை உருவாக்கி, மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்கள் எப்போது இறப்பார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வைத்துள்ளது.

இது முதல்கட்ட சோதனைதான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் உடல்நலன் சார்ந்த விவரங்கள், மருந்துகள், மாத்திரைகள், போன்றவற்றின் உள்ளீட்டு விவரங்களைக் கூகுள் ஏஐ-யிடம்(ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்)அளித்தால், அந்த நோயாளி இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிருடன் இருப்பார் என்ற விவரத்தை 93 முதல் 95 சதவீதம் துல்லியமாகக் கணித்துக் கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அது குறித்த விவரங்களை அளித்தாலும், எப்போது, எந்தத் தேதியில், எந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், அடுத்து எத்தனை நாட்களுக்குப் பின் அவர் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும், அல்லது பரிசோதனைக்கு வர வேண்டுமா என்பதையும் கூகுள் ஏஐ தெரிவிக்கிறது.

இது குறித்த ஆய்வறிக்கை கடந்த மாதம் தி நேச்சர் வார ஏட்டில் வெளியாகி இருந்தது. அதில் மார்பகப் புற்றநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரின் உடல்பரிசோதனை குறித்த விவரங்கள் இந்தக் கூகுள் ஏஐயில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவரின் வாழ்நாள் குறித்து கேட்கப்பட்டது.

அந்த பெண் குறித்து ஆய்வு செய்த கூகுள் ஏஐ, 19.9 சதவீதம் உயிர்வாழ அந்த பெண்ணுக்கு சாத்தியம் இருக்கிறது என்றது. ஆனால், மருத்துவர்களோ 9.3 சதவீதம் மட்டுமே உயிர்வாழ சாத்தியம் என்று தெரிவித்தனர். ஆனால், மருத்துவர்கள் கணிப்பின்படி அந்த பெண் இன்னும் சில மணிநேரங்களில் இறந்துவிடுவார் என்று முடிவு செய்தனர். ஆனால், இறுதியில் கூகுள் ஏஐ கணிப்பின்படி, அந்த பெண் அடுத்த சில நாட்களுக்கு உயிருடன் வாழ்ந்து அதன்பின் இறந்தார்.

கூகுல் ஏஐயில் செயல்படும் மனிதர்களின் நரம்புமண்டலம் போன்ற ஒருவகையான மென்பொருள் நாம் அளிக்கும் விவரங்களைத் தானாகவே கற்றுக்கொண்டு, தன்னை மேம்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது.

கடந்த காலத்தில் இறந்த நோயாளிகளின் உடல்நலன் தொடர்பான புள்ளிவிவரங்களை அளித்து கூகுள் ஏஐயிடம் அவர்கள் இறந்த நாட்கள், தேதி குறித்து கேட்கப்பட்டது. அதில் கூகுள் ஏஐ கூறிய தேதிகள், நேரம் ஏறக்குறைய 95 சதவீதம் சரியாக பொருந்தியது கண்டு மருத்துவர்கள் வியந்துவிட்டனர். அந்த புள்ளிவிவரங்களைக் கொடுத்ததும் கூகுள் ஏஐ செயல்பட்ட விதம், வேகம், அதன் துல்லியத்தன்மை ஆகியவற்றைக் கண்டு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் வியந்துள்ளனர்.

எதிர்காலத்தில் கூகுள் நிறவுனத்தின் இந்த ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு மருத்துவமனைகளிலும், கிளினிக்களிலும் கொண்டுவரப்படும். அப்போது, ஒருநோயாளின் நோய் குறித்த விதம், அவரின் உடல்நலன் சார்ந்த விவரங்கள் மூலம் அவர்களின் வாழ்நாள் குறித்த துல்லியத்தன்மை, அவர் குணமடைவாரா, எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதையும் அறிய முடியும்.

மேலும், கூகுள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒருவரின் உடல்நலன் குறித்த விவரங்களை அளிக்கும் போது ஒருவருக்கு மாரடைப்பு எப்போது வரும், சாத்தியங்கள் குறித்து கண்டுபிடித்துக் கூற முடியும். கூகுள் மெடிக்கல் பிரையன் தொழில்நுட்பம், மருத்துவர்களோடு இணைந்து செயல்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் ஒருவருக்கு நீரழிவுநோய் வருமா என்பதையும் கண்டுபிடித்துக் கூற முடியும.்

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x