Last Updated : 13 Jun, 2018 01:42 PM

 

Published : 13 Jun 2018 01:42 PM
Last Updated : 13 Jun 2018 01:42 PM

மத்திய அமைச்சர் நக்வி அளிக்கும் இப்தார் விருந்து: முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரான முக்தார் நக்வி இன்று டெல்லியில் இப்தார் அளிக்கிறார். அதில், முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் முக்தார் அப்பாஸ் அலுவலக வட்டாரம் கூறும்போது, ‘முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் இன்று கலந்து கொள்கின்றனர். அவர்கள் தம் பாதித்த விதத்தை எடுத்துக்கூற உள்ளனர். இதன்மூலம், நாடளுமன்றத்தில் நிலுவையில் உள்ள அதன் மீதான மசோதாவிற்கு வலு சேர்க்கப்படும்.’ எனத் தெரிவித்தனர்.

ஒரே சமயத்தில் மூன்றுமுறை தலாக் கூறி, தம் மனைவியை விவாகரத்து செய்யும் முறை முத்தலாக் எனப்படுகிறது. இந்தமுறையை, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 முஸ்லீம் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது இந்தியாவில் தொடர்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

முத்தலாக் மீதான தீர்ப்பு கடந்த வருடம் ஆகஸ்டில் வெளியாகி இருந்தது. அதில், முத்தலாக் தடை செய்யப்பட்டதுடன், அதை அமலாக்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்தது. இது, இன்னும் சட்டமாக நிறைவேறாமல் உள்ள இந்த மசோதா, நாடாளுமன்றத்தின் நிலுவையில் உள்ளது.

முத்தலாக் தோன்றிய வரலாற்றுக் காரணம்

ஐந்தாம் ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவின் இரண்டாவது கலீபாவான ஹசரத் உமர் என்பவரின் ஆட்சிக்காலத்தில் எகிப்தில் ஒரு சமூகப் பிரச்சனை ஏற்பட்டது. இதில், அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தம் கணவன்மார்களை விட்டு விலக விரும்பினர். இதற்காக அவர்கள் அனைவரும் ஹசரத் உமரிடம் நீதி கேட்டு சென்றனர்.

ஹசரத் உமர், மக்கள் நீதிமன்றம் போல் ஒரு சபை கூட்டி நவீன முறையில் அவர்கள் தம் கணவன்மார்களை ஒரே மூச்சில் மும்முறை தலாக் கூறச் செய்தார். இதனால், அப்பெண்களுக்கு உடனடியாக விவாகரத்து கிடைத்தது. அப்போதைய சுழலில் முதன்முறையாகவும் ஒரே முறைக்காகவும் செய்யப்பட்ட முத்தலாக் முழுக்க, முழுக்க ஒரு தற்காலிக ஏற்பாடு ஆகும்.

இந்த மும்முறை தலாக்கை தவறாகப் புரிந்த சில ஆண்களும், அவை தங்களுக்கு சாதகமாக இருப்பதாலும் முத்தலாக் முறை தொடர்ந்தது. இதற்கு முடிவு கொண்டுவர முயலும் பாஜக அதில் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகவும் புகார் நிலவும் சூழலில், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வீ. இந்த இப்தாருக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x