Last Updated : 13 Jun, 2018 02:17 PM

 

Published : 13 Jun 2018 02:17 PM
Last Updated : 13 Jun 2018 02:17 PM

குக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்: துபாய்க்குச் செல்ல முயன்ற நபர் கொச்சியில் கைது

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகளை துபாய்க்கு குக்கரில் கடத்திச் செல்ல முயன்ற நபர் இன்று காலை பிடிபட்டார்.

இதுகுறித்து சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாவது:

புதுடெல்லியிலிருந்து விமானத்தில் கொச்சி வழியாக துபாய் செல்ல முயன்ற நபர் தன்னுடன் ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தையும் கொண்டு செல்ல முயன்றது தடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முயன்றவர் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர். இன்று (புதன்கிழமை) அதிகாலையில் துபாய்க்கு விமானத்தில் பறக்க முயன்றபோது அவரது பைகள் சோதனையிடப்பட்டன. அப்போது சவுதி அரேபியாவின் ரியால்களும் அமெரிக்க டாலர்களையும், பிரஸர் குக்கர் மற்றும் ஸ்டவ் பாத்திரங்களில் அவர் மறைத்து வைத்திருந்தது பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

பயணி மறைத்து வைத்திருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அந்த வெளிநாட்டுப் பயணியும் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் எப்படி இவ்வளவு வெளிநாட்டுப் பணம் வந்தது. அதை எதற்காக துபாய் எடுததுச் செல்கிறார் போன்ற விவரங்களை அறிய அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x